9 வது நாள் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க விழிப்புணர்வு நடைபயணம் இன்று 09-04-2018 அன்று காலை ராயப்பன்பட்டியில் இருந்து தொடங்கியது.
இந்த நிலையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் வருவது தெரிந்து நீங்கள் வந்து தான் இந்த மரக்கன்றை நட்டுவைக்க வேண்டும் என்று இளைஞர்கள் வேண்டுகோள் வைத்ததன் படி மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார்.
நடைபயண தொடர்பில், அவசர மருத்துவ உதவி செய்த டாக்டர் சதன் திருமலைகுமார் டாக்டர் ரொகையா டாக்டர் ரகுராமன் மற்றும் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் தலைவர் வைகோ அவர்கள் நன்றி தெரிவித்தார்.
நடைபயணத்தில் தியாக செம்மல் திரு.மா.ராசாங்கம் Ex. M.P அவர்களின் நினைவாலயத்தை பார்வையிட்டார் தலைவர் வைகோ அவர்கள்.
9 ஆம் நாள் நடைபயண நிறைவு நிகழ்ச்சி கூடலூரில் நடந்தது. இதில் தோழர் நல்லக்ண்ணு அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது அவர் உரையாற்றும்போது, மக்களை மீட்க வேண்டும். இந்த வட்டாரத்து மக்களை காக்க வேண்டும். நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வைகோ அவர்கள்
மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த நியூட்ரினோ நடைபயணத்தையும் நடத்துகிறார்கள். என நல்லக்கண்ணு தன் உரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment