5 வது நாள் பயணமாக இன்று 04-04-2018 நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் தொடர்ந்தது. இன்றைய பொதுக்கூட்டமானது மாவட்ட செயலாளர் சந்திரன் ஏற்ப்பாட்டில் போடிநாயக்கனூர் பகுதியில் சிறப்பாக நடந்தது.
இன்றைய நடைபயணத்தில், தலைவர் வைகோ அவர்களின் தாயார் பெயர் மற்றும் உருவம் கொண்ட முதிர்தாய் மலர்கொடுத்து வாழ்த்தினார். அவர் பெயரும் மாரியம்மாள் தான். உடனே தலைவர் அவர்கள், உங்கள் வாழ்த்தை என் அம்மாவே வந்து வாழ்த்துவதாக எண்ணிக் கொள்கிறேன் என நெகிழ்ச்சியுற்றார்.
நடைபயண வழி நெடுகிலும் மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். மதிமுகவினர் விழுப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே நடந்தார்கள்.
ஒமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment