தமிழீழ போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் விதமாக அதனை ஓவியமாக தீட்டி கற்சிலைகளாக செதுக்கி தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றமாக எழுப்பியுள்ளனர்.
அந்த இடத்தை கொடுத்தவர் ம.நடராஜன் அவர்கள். அதை நிறுவியவர் பழ.நெடுமாறன் அவர்கள். அந்த ஓவியங்களை வரைந்தவர் மறைந்த தமிழீழ போராளி ஓவியர் வீரசந்தனம் அவர்கள்.
இந்நிலையில் இன்று 15-04-2018 மறைந்த மொழிப்போர் தியாகி ம.நடராஜன் அவர்கள் படத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திறந்து வைக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வருகை தந்து ம.நடராஜன் படத்தை திறந்து வைத்து, ம.நடராஜன் பற்றிய அவரது தமிழ் உணர்வு, தமிழீழ உணர்வை பற்றி எடுத்து கூறினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment