நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணத்திற்கு வலு சேர்க்கவும் , வைகோ மதுரையில் இருந்து கம்பம் வரையில் ஒன்பது நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட துவக்க கூட்டத்தில் தன்மேனியில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தன் உடலை தனலுக்கு தந்த சிவகாசி இரவி சிகிச்சை பலனின்றி இன்று 02-03-2018 அதிகாலை இயற்கை எய்தினார்.
இந்த துயரச் செய்தி கேட்டு துடி துடித்து போன வைகோ பூச்சிப்பட்டி அருகே நடைபயணம் சென்ற போது, அங்கிருந்து கிளம்பி மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிவகாசி இரவியின் உடலுக்கு மாலை வைத்து செலுத்தினார். பின் இரவியின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சிவகாசிக்கு கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கில் கலந்து கொண்டு பின் மாலையில் நடைபயணத்தை தொடர்ந்தார்.
இன்றைய 3ஆம் நாள் நடைபயணம் நிறைவு நாளில் ஆண்டிப்பட்டியில் உரையில், துரும்பை தூக்கி விட்டு அதை தூணாக காட்டுபவர்க்ள் இங்கே அதிகம். எல்லாவற்றையும் விளம்பர படுத்தி கொள்பவர்கள் தான் இங்கே உண்டு. இந்த நியூட்ரினோ திட்டத்தை தன்னந்தனியாக போராடி மூன்று ஆண்டுகள் நிறுத்தி வைத்திருப்பவன் இந்த வைகோ என்று எத்தனை பேருக்கு தெரியும்? என கேள்வி எழுப்பினார் வைகோ.
நியூட்ரினோ பிரச்சினையில் தமிழக மார்க்சிஸ்ட்கள் நிலைப்பாட்டை குற்றம் சாட்டுகிறேன் என கூறினார்.
இந்த கரங்கள் மக்களுக்காக, கறை படியாத கரங்களாக இருக்கிறது என்பது எதிரிக்கும் தெரியும். உணர்ச்சியுள்ள இளைஞர்கள் உங்களை அழித்துக் கொள்ளாதீர்கள்.ஆனால் போராட வாருங்கள். கை கூப்பி அழைக்றேன். வாருங்கள் என இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் வைகோ.
No comments:
Post a Comment