நியூட்ரினோ திட்டம் தேனி அம்பரப்பர் மலையை குடைந்து ஆய்வகம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நியுட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் தலைவர் வைகோ தலைமையில் ஏராளமான இளைஞர்கள் மதிமுகவினர் கலந்துகொண்டனர்.
இந்த நடைபயணங்களில் மதிமுக் மாவட்ட செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், இணையதள அணியினர், மற்ற கழக தோழர்கள், தமிழ் இயக்க தோழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடைசி தினங்களில் தொடர்ச்சியாக நடைபயணத்தில் கலந்துகொண்டார்.
வரும் வழியில் 10 ஆம் நாளான இன்று கபாடி விளையாட்டு வீரர்கள் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தலைவர் வைகோ அவர்களின் நடைபயணத்திற்கு உடற்பயிற்சி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
மக்களிடம் பேசிய வைகோ அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பதாக வந்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நியூட்ரினோவை எதிர்த்து போராடும் அணு விஞ்ஞானி திரு பத்மநாபன் அவர்கள் கம்பம் வந்து வைகோவை சந்தித்தார்.
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட்க்கு அனுமதி மறுப்பு. போராடிய குமரெட்டியாபுரம் மக்களுக்கு பாராட்டு என மக்களை வாத்தினார் வைகோ.
திட்டத்தை எதிர்த்து போராடும் போது, அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் முதல் அடி என் மீதுதான் விழும் என்ற உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுக்கிறார் தலைவர் வைகோ.
மனித சங்கிலி என கம்பம் நகர் முழுக்க நியூட்ரினோவிற்கு எதிராக கைகோர்த்து நின்றார்கள் மதிமுகவினர்.
ஸ்டெர்லைட் பிரச்சினையில் வைகோ சொன்னதை அப்போதே மத்திய மாநில அரசுகள் கேட்டிருந்தால், இன்றைக்கு ஸ்டெர்லைட் போராட்டமே இருக்காது என கேரள அணு விஞ்ஞானி பத்மநாபன் அவர்கள் தெரிவித்தார்.
விடுதலைபுலிகளிடம் இருந்து காசு வாங்கும் ஈனப்பிழைப்பை ஒரு நாளும் செய்ததில்லை என வைகோ பேசினார்.
2008 ல் இரண்டாவது தடவையாக ஈழத்திற்காக போனதாக கதை விடுவது எதற்காக சீமான். இளையதலைமுறையே நம்பாதீர்கள் என பேசினார்.
எல்லா இழப்புகளையும் தாங்கி, இந்த கட்சியை என் தொண்டர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். இது திறந்த புத்தகம். என் கைகள் கறை படியாதவை. எந்த பணக்காரனிடமும் நின்று செலவுக்கு பணம் வாங்கியதில்லை என வைகோ பேசினார்.
ஸ்டெர்லைட் மாதிரி 10 ஆண்டுகள் கழித்து நியூட்ரினோவில் போராட முடியாது. வருமுன்னே தடுக்க வேண்டும் என்றார்.
எனக்கென தனிப்பட்ட காயங்கள் உண்டு. ஈழத்தில் நடந்த கொடுமைகளை மறக்கவில்லை நான். ஆனால், அதைவிட கொடுமை இந்த தமிழகத்திற்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத்தன் தற்போதையை அரசியல் கூட்டணியில் சேர்ந்தேன்.
நியூட்ரினோ வை இங்கு வர விடமாட்டோம். அதற்காக எந்த தியாகத்தை செய்யவும் இந்த வைகோ சித்தமாக இருக்கிறேன்.
தமிழினத் தலைவர் வைகோ மேற்கொண்ட நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் இன்று 10-04-2018 கம்பம் நகரில் நிறைவு பெற்றது.
கம்பத்தில் மாலை பொதுக்கூட்டத்தில் நல்லகண்ணு, உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment