Tuesday, September 27, 2016
Monday, September 26, 2016
மக்கள் நலக் கூட்டியக்கம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும்-வைகோ!
உள்ளாட்சி தேர்தல் குறித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று 26-06-2016 மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது. கலந்துரையாடலில் மக்கள் நலக் கூட்டியக்கம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என முடிவெடுக்கப்பட்டு, வெற்றிக்கு இணைந்து பாடுபடவேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தேர்தல் அறிவிப்பிற்கு மறுநாளே ஆளும்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளி வருவது கேள்விக்குரியது.
காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது. சட்டசபை கூட்டி தண்ணீர் விடக்கூடாது என தீர்மானமும் கர்நாடகத்தில் நிறைவேற்றி இருப்பது இந்திய இறையாண்மை க்கு விடுக்கப்பட்ட சவால். இதை பிரதமர் மோடி கண்டிக்காத்தையும் தவறாக நினைக்கிறோம். மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது என்றும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
கோவையில் நடந்த படுகொலையை கண்டிக்கும் அதே வேளையில் மறுநாள் நடந்த வன்முறையினை கண்டிப்பதோடு, சேதமடைந்தவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பிரச்னையை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன் எனவும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் மற்றும் கூட்டணி இரத தலைவர்கள் கலந்துகொண்டனர்.
81 ஆவது பிறந்த நாளில் சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் வைகோ மரியாதை!
கடந்த 24-09-2016 அன்று பா.சிவந்தி ஆதித்தனாரின் 81 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலிங்கப்பட்டியில் இருதய மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினார்.
இலவச மருத்துவ சோதனை முகாமை முடித்து சென்னை திரும்பிய வைகோ அவர்கள், இன்று 26-09-2016 மதியம் 1:40 மணிக்கு போயஸ்கார்டனிலுள்ள பா.சிவந்திஆதித்தன் அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் சிவந்தி ஆதித்தனார் மகனும் இருந்தார். மேலும் மதிமுக கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.
Sunday, September 25, 2016
இரண்டாம் நாள் இருதய மருத்துவ முகாம் முடிவில் சேவையாற்றிய செம்மல்களுக்கு பாராட்டு!
இருதய பரிசோதனை முகாமின் இரண்டாவது நாளான இன்று 25-09-2016 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடக்கிறது. இதில் 3000 ஆயிரம் பேருக்கு மேலானோர் பதிவு செய்து பரிசோதனை செய்துள்ளனர். கலந்து கொண்டவர்களுக்கு உயர் சிகிச்சைக்கான மருத்துவ அட்டை வழங்கப்பட்டது.
சென்னை பில்ராத் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் 2000பேருக்கு ECGஎடுக்கப்பட்டுள்ளது. 250பேருக்கு ECHO எடுக்கப்பட்டுள்ளது. 87பேர் Angiogram பண்ணுவதற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு சென்னையில் இலவசமாக சிகிச்சை அளிக்க வைகோ ஏற்பாடு செய்துள்ளார்.
மூன்று ஆயிரம் பேருக்கு மேலானவர்களுக்கு இலவச இதய பரிசோதனை செய்த இந்த முகாமில், சேவை மனப்பான்மையோடு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உணவு தயாரித்து வழங்கியவர்கள் என அனைவருக்கும் முகாம் இறுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அனைவருக்கு, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த முகாமில் பரிசோதை செய்த அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அருளை வேண்டுகிறோம்.
தமிழீழத்தில் "எழுக தமிழ்" எழுச்சி பேரணி!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் முற்றவெளியில் ‘எழுக தமிழ்‘ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் நேற்று 24-09-2016 அன்று திரண்டெழுந்தனர். தமிழ் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கின்ற சிகப்பு மஞ்சள் கொடியை ஏந்தியவாறு எழுச்சி பேரணியில் கலந்துகொண்டனர்.
தமிழர்களின் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை சிங்கள கொட்டம் அறிந்திருக்கும். அற வழியில் தொடங்கிய போராட்டம், ஆயுதமேந்த நிர்பந்தப்படுத்தப்பட்டு, மீண்டும் அனைத்து தமிழீழ மக்களாலும் அற வழியிலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழீழ புலிக்கொடி ஐநா முன்றலில் பட்டொளி வீசி பறக்கும் நாள் வரை தமிழர்களின் தாகங்கள் தணியாமல் போராட்டம் நடபெற்றுக்கொண்டேதான் இருக்கும்.
தமிழீழத்தினை வென்றிட.... எழுக தமிழினமே...
தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
Saturday, September 24, 2016
கலிங்கப்பட்டியில் வைகோ-பில்ராத் இருதய பரிசோதனை முகாம்!
மனிதம் வாழ வேண்டுமென்பதற்காக அவர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு முன் பரிசோதனை நடைபெறுகிறது. இளைஞர்கள் இருதய கோளாறுகளால் இறக்கிறார்கள். எனவே கிராம மக்கள் இருதயங்களை முன் பரிசோதனை செய்து நிவர்த்தி செய்ய வேண்டுமென்று இன்றும் நாளையும் (24-09-2016, 25-09-2016) கலிங்கப்பட்டி மேல் நிலை பள்ளியில் இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
Friday, September 23, 2016
வள்ளுவன் குறள் ஒலிக்கும் மணிக்கூண்டினை திறந்து வைத்தார் வைகோ!
ஒரு மணி நேரத்திற்க்கு ஒருமுறை உலக பொதுமறையை தந்த அய்யன் திருவள்ளுவரின் ஈரடி திருக்குறள் ஒலிக்கும் மணிக்கூண்டினை திறந்து வைக்க நேற்று 22-09-2016 அன்று தமிழின முதல்வர் வைகோ அவர்களும், கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் வைகோவின் தம்பியுமான வை.இரவிசந்திரன் அவர்களும் வருகை புரிந்தனர். அப்போது ஊர் மக்கள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
Subscribe to:
Posts (Atom)


















































