இருதய பரிசோதனை முகாமின் இரண்டாவது நாளான இன்று 25-09-2016 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடக்கிறது. இதில் 3000 ஆயிரம் பேருக்கு மேலானோர் பதிவு செய்து பரிசோதனை செய்துள்ளனர். கலந்து கொண்டவர்களுக்கு உயர் சிகிச்சைக்கான மருத்துவ அட்டை வழங்கப்பட்டது.
சென்னை பில்ராத் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் 2000பேருக்கு ECGஎடுக்கப்பட்டுள்ளது. 250பேருக்கு ECHO எடுக்கப்பட்டுள்ளது. 87பேர் Angiogram பண்ணுவதற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு சென்னையில் இலவசமாக சிகிச்சை அளிக்க வைகோ ஏற்பாடு செய்துள்ளார்.
மூன்று ஆயிரம் பேருக்கு மேலானவர்களுக்கு இலவச இதய பரிசோதனை செய்த இந்த முகாமில், சேவை மனப்பான்மையோடு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உணவு தயாரித்து வழங்கியவர்கள் என அனைவருக்கும் முகாம் இறுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அனைவருக்கு, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த முகாமில் பரிசோதை செய்த அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அருளை வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment