தென் மாவட்ட மதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் நாளை 03.09.2016 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் திருநெல்வேலி ஹோட்டல் லாரா பேரடைஸ் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
இதில் மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோஹையா தலைமை வகிக்கிறார். துணை செயலாளர் நாகர்கோயில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ராணி செல்வின் வரவேற்று பேசுகிறார். சிறப்பு அழைப்பாளர்களாக தென் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கிறார்கள். தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியை மாநகர் மாவட்டம் ஏற்ப்பாடு செய்துள்ளது.
இதில் ஏராளமான மகளிர் மதிமுகவில் இணையும் நிகழ்வும் நடைபெறுகிறது. கழக மகளிரணியினர் ஏராளமான புதிய உறிப்பினர்களை சேர்த்து கழகத்திற்கு வலுசேர்க்கவும், ஏனைய கழக நிர்வாகிகள் கலந்துகொள்ளவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment