திருச்சியில் நேற்று 15-09-2016 நடந்த அண்ணாவின் 108 ஆவது பிறந்த நாள் விழா, மதிமுக மாநாட்டில், நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக சங்கொலி படித்தார். மதிமுக வின் அதிகாரபூர்வ ஏடான சங்கொலியின் கடைசி பக்கத்தில் ஓமன் மதிமுக இணையதள அணியின் விளம்பரம் மாநாட்டை வரவேற்க்கும் விதமாக கொடுக்கப்பட்டிருந்தது. இது தலைவர் வைகோ அவர்களின் கைகளில் தவழ்ந்த போது கழக இணையதள அணி தோழர்கள் படம்பிடித்து வெளியிட்டிருந்தனர். இது ஓமன் இணையதள அணியினருக்கு உடனே அனுப்பப்பட்டது. தலைவர் கைகளில் நமது விளம்பரம் தவழ்கிறது என்பதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர். இதுதான் தொண்டர்களுக்கும் தலைவனுக்குமான பாச உணர்வு.
ஒளிப்படத்தை எடுத்த அண்ணன் கருணாகரன் மற்றும் இணயதள அணி கண்மணிகளுக்கு ஓமன் இணையதள அணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment