Thursday, September 15, 2016

மாநாடு களை கட்டுகிறது.. காலையிலே கூட்டம். வைகோ பார்வை!

108 ஆவது அண்ண பிறந்த நாள் விழா மதிமுக மாநாடு, அண்ணாவின் கொள்கைகளை கடைபிடித்து வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆண்டு தோறும் நடத்துகிறது.

இந்த ஆண்டு திறந்த வெளி மாநாடாக திருச்சி மாநகரில், உழவர் சந்தை மைதானத்தின் இன்று செப்டம்பர் 15 ஆம் நாள் மாலை 4 மணி அளவில் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற இருக்கிறது. 

கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை கழக கண்மணிகள் படையெடுத்துள்ளனர். தேர்தல் அரசியலில் தோற்றாலும், கொள்கைகளை வென்று காட்டிட அனைவரும் பீனிக்ஸ் பறவையாக உயரே பறந்து கொள்கைகளை  வென்றிட திருச்சி நோக்கி செல்கின்றனர்.

மாநாட்டுதிடலை காலையிலே அண்ணாவின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்று பார்வையிட்டார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள். கழக முன்னணி நிர்வாகிகள் ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ளனர். 

இந்த மாநாடு வரலாற்றில் பொன் மகுடம் பதிக்கும் விதமாக மதிமுகம் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. இணையத்தில் மதிமுக தொலைக்காட்சியை நமது பம்பரம் இணைய தொலைக்காட்சியில் www.pambaramtv.com என்ற வலைதளத்திலும் காணலாம்.

அனைவரும் மாநாட்டுக்கு வாரீர்! வெற்றி மகுடம் சூட்டுவீர்!

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment