மணி வாசகங்கள் மகுடங்களாக சூடிட,
வெண்தாடி வேதங்களை வானுயர்த்தி
அண்ணாவின் அடிநாதங்களை ஆழ்ந்துணர்ந்து,
வைகோவின் வரிப்புலிகள் புகழ் பல பெற்றிட,
திராவிட கொள்கைகளை தினம் மகிழ்ந்து பரப்பிட,
தெவிட்டாத தேன் தமிழுடன் தமிழீழம் மலர்ந்திட
துரோக சூனியத்தை சூளுரைத்து நொறுக்கிட
கழனிக்கொரு கண்மணி கழக கொடியுடன்,
களம் காண காளையர் கரைபுரண்டோடிட
அண்ணாவின் தம்பியின் புயல்வீச்சை புசித்திட,
அரபி கடலின் அலையோசை தாயகம் கேட்டிட,
கழகமே கண்ணாக கண்மணிகள் நினைத்திட
மார்தட்டி நான் மதிமுக காரன் என்று கனைத்திட
காஞ்சி தலைவன் கொள்கை கேட்க வாரீர்!
காளரை தூக்கிவிட்டு செல்வீர்!
திராவிடத்தின் உண்மையான கையிருப்பு,
தமிழின முதல்வர் வைகோ அழைக்கிறார்!
இடம்: திருச்சி உழவர் சந்தை
நாள்: 15 செப்டம்பர் 2016
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment