ஒரு குற்றமும் செய்யாமல் 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, ராஜேஷ் எனும் சக கைதி இரும்புக் கம்பியால் கொலை வெறியுடன் கொடூரமாக தாக்கியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டு இருக்கின்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பு நிறைந்த சிறையில் நடந்த இந்தச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சிறையிலேயே அவரை கொலை செய்யும் முயற்சி நடந்ததோ? என்ற ஐயப்பாடு எழுகிறது. ஏற்கனவே உடல் நலம் குன்றி, மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளன் தற்போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது வேதனை தருகிறது. பேரறிவாளன் மீது சிறையில் தாக்குதல் நடந்ததற்கான பின்னணியை தமிழக அரசு உடனடியாக கண்டறிய வேண்டும்.
நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி வரும் பேரறிவாளனை மூன்று மாத காலம் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும், வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க முன்வரவேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment