மதிமுக தலைமை அலுவலகமான சென்னை தாயகத்தில் நாளை 10-09-2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சமூக வலைதளங்களில் சிறப்பாக பணியாற்றுகின்ற கழக இணையதள கண்மணிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது.
மேலும் நம் மதிமுக இணையதள பணிகளிலும், கழகப் பணிகளிலும் செவ்வனே ஈடுபட்டு கடந்த 28/06/2016 அன்று நம்மை விட்டு பிரிந்த தோழர் வடசென்னை செல்வா அவர்களின் குடும்பத்திற்கும் அவரது குழந்தைகளின் கல்விக்குமான நிதியளிப்பும் நடைபெற இருக்கிறது.
மேலும் நம்மோடு நினைவில் இணைந்திருக்கும் இணையதளத் தோழர்களான, மதிமுக ஸ்ரீதரன், சுரேஷ் கே பெருமாள்சாமி, அய்யப்பன் காந்தி, வடசென்னை செல்வா ஆகியோரின் திரு உருவ படத்திறப்பு விழாவும் நடக்க இருக்கிறது.
இம்மூன்று நிகழ்விலும் நம் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு நம்முடன் உரையாட இருக்கிறார்கள்.
மதிமுக இணையதள அணி கண்மணிகள் அனைவரும் இதையே அழைப்பாக கருதி சரியான நேரத்தில் வருகை தந்து நிகழ்வை சிறப்பிக்க ஓமன் இணையதள அணி சார்பிலும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தகவல்: இணையதள நேரலை அம்மாபேட் கருணாகரன்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment