உறவுகள் கட்சிகளின் அடிப்படையிலும் ஏற்ப்படுவதுண்டு என்பதை நிரூபித்து உலகிற்கு வழிகாட்டியாக இருக்கின்ற தொண்டர்களால் உருவான ஒப்பற்ற இயக்கமாம் மதிமுகவிற்கு அகிலமெங்கும் நல்லவர்கள் மட்டுமே உறிப்பினர்களாக இருப்பர்.
பொருள் தேடி பல நாடுகளில் வாழ்ந்தாலும் சிறு குழுக்களாக கழகத்திற்கு இயன்ற வேலைகளை செய்து வருகிறோம். அதே போல இந்த வருடமும் வருகிற 108 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா திருச்சி மாநகரில் உழவர் சந்தையில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கழக அதிகாரபூர்வ ஏடான சங்கொலியில் விளம்பரம் தரப்பட்டிருக்கிறது. அது மாநாடு பந்தலில் தவழும் வண்ணம் காண்போர் கண்ணில் பட ஓமன் இணையதள அணிக்கு ஊக்கமளுக்கும் வகையில் இருக்கும். அந்த விளம்பரத்தினை இதனுடன் இணைத்துள்ளோம்.
ஓமன் இணையதள அணியின் மாநாட்டு அழைப்பு கவிதை வாசகம்
மலைக்கோட்டையை மலைக்க செய்திட,
மணி வாசகங்கள் மகுடங்களாக சூடிட,
வெண்தாடி வேதங்களை வானுயர்த்தி
அண்ணாவின் அடிநாதங்களை ஆழ்ந்துணர்ந்து,
வைகோவின் வரிப்புலிகள் புகழ் பல பெற்றிட,
திராவிட கொள்கைகளை தினம் மகிழ்ந்து பரப்பிட,
தெவிட்டாத தேன் தமிழுடன் தமிழீழம் மலர்ந்திட
துரோக சூனியத்தை சூளுரைத்து நொறுக்கிட
கழனிக்கொரு கண்மணி கழக கொடியுடன்,
களம் காண காளையர் கரைபுரண்டோடிட
அண்ணாவின் தம்பியின் புயல்வீச்சை புசித்திட,
அரபி கடலின் அலையோசை தாயகம் கேட்டிட,
கழகமே கண்ணாக கண்மணிகள் நினைத்திட
மார்தட்டி நான் மதிமுக காரன் என்று கனைத்திட
காஞ்சி தலைவன் கொள்கை கேட்க வாரீர்!
காளரை தூக்கிவிட்டு செல்வீர்!
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment