இந்திய அரசியல் கட்சிகளில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழுகின்ற மதிமுகவின் இணையதள அணி உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடன் இன்று 10.09.2016 காலை சென்னையிலுள்ள மதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. மேடையில் இணையதள அணி நண்பர்களை தன்னுடன் அமர்த்தி அழகு பார்த்தார் தலைவர். இதில் 150 க்கும் அதிகமான இணையதள அணி நண்பகள் கலந்துகொண்டது சிறப்பிக்கத்தக்கது.
இந்த நிக்ழ்வில் மதிமுக இணையதள அணியில் சிறப்பாக செயலாற்றி நம் நினைவில் வாழும் சமூக வலைதள எழுத்தாளர்களான ஸ்ரீ தர் (அமெரிக்கா), சுரேஷ் (கோவில்பட்டி), அய்யப்பன் காந்தி (அருப்புக்கோட்டை), செல்வா (வடசென்னை) ஆகியோரின் மறைவுக்கு, அவர்களது திருஉருவபடங்கள் திறந்து வைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மறைந்த வடசென்னை செல்வா அவர்களின் குழந்தைகள் படிப்பிற்காக மதிமுக இணையதள அணி மற்றும் கழகம் இணைந்து ₹275000 வட சென்னை செல்வா அவர்களின் மனைவியிடம் கையளிக்கப்பட்டது. மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் அண்ணன் மேத்யூ சிங் அவர்கள், மத்தேயு கிறித்தவ புத்தக நிலையம் சார்பாக அனுப்பிய திருவிவிலியம் வடசென்னை செல்வா மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் பொற்கரங்களில் கொடுக்கபட்டது.
உணவு இடைவேளைக்கு பின்னர் கழக இணையதள அணியினர் தங்கள் ஒவ்வொரு கருத்தையும் ஆழமாக எடுத்து வைத்தனர். தலவரும் கவனித்து கலந்துரையாடினார். இறுதியாக தலைவர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வை ஏற்ப்பாடு செய்த கழக இணையதள அணியினருக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment