பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு இன்று காலை 8:15 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட கழக முன்னோடிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.
மறுமலர்ச்சி தி.மு.க. தலைமையகமான தாயகத்தில், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புஹாரி, மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகh தயாளன், வெளியீட்டு அணி மாநிலத் துணைச் செயலாளர் எம்.எல்.எப்.ஜார்ஜ், மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் வி.சேஷன், தொண்டர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மயிலை வெ.இரவிச்சந்திரன், ஆலந்தூர் செல்வராஜ், பகுதிச் செயலாளர்கள் எழும்பூர் -தென்றல் நிசார், விருகை -எம்.ஜி.ஆர்.நகர் ரவி, அண்ணாநகர் -இராம.அழகேசன், ஆலந்தூர் -கத்திப்பாரா ஜெ.சின்னவன், சைதை எஸ்.வி.குமார், தொண்டர் அணி தேவன், மயிலை ராஜேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தென்சென்னை மேற்கு -ஆனந்தி ராம்தாஸ், வடசென்னை கிழக்கு -விக்டோரியா மேரி, தென்சென்னை கிழக்கு -விஜயலட்சுமி, செல்வி சாஸ்திரி, சைதை பந்தல் சேகர், அம்மாபேட்டை கருணாகரன், க.இளவழகன், தியாகராஜன், மு.யுவராஜ், த.செல்லப்பாண்டி, ந.அறிவழகன், க.சங்கர், அழகன், ஆட்டோ வைகோராஜ், ஜெயவேல், வைகோ ராஜ், கராத்தே பாபு, சாக்ரடீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் என மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment