தலைவர் விரும்பாத பிறந்த நாள் கொண்டாட்டங்களை செப்டம்பர்
22 ல் அவருடைய பிறந்த நாளாக இந்த வருடத்திலிருந்து கொண்டாட திட்டம்.
எனவே இந்த வருடத்திலிருந்து தலைவர் வைகோ அவர்களுக்கு அண்ணா,
பெரியார் பிறந்த மாதத்திலே பிறந்த நாள் கொண்டாட்டம் இருக்கும்.
எனவே கழக கண்மணிகள் அனைவரும் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துதலை தெரிவியுங்கள்.
சுய நலத்திற்காக தமிழினத்தை அழித்த தலைவர்களும்,
சுய நலத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தலைவர்களும் தங்கள் பிறந்த நாளை மாட மாளிகையில் தோரணங்கள்,
மேள தாளங்கள் முழங்க,
ரோட்டை அடைத்து,
போக்குவரத்தை மறித்து,
மக்களுக்கு இடைஞ்சலை கொடுக்கிற வேளையி,
தனது பிறந்த நாளையே அறியாமல்,
மக்களுக்கான போராட்ட வாழ்விலே ஈடுபடுத்தி கொண்டு
52 ஆண்டுகள் பொது வாழ்வில் முடித்து அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள்.
சிலைகள் தன்னை அபிசேகம் பண்ண கேட்பதில்லை.
மனிதர்கள்தான் சிலைக்கு தானாக அபிசேகம் பண்ண வேண்டும் என்ற விதிகளின் படி,
கடவுளே வேண்டாமென ஒதுக்கினாலும் பக்தர்களின் பக்தியால் அபிசேகம் செய்வதுண்டு.
அதைதான் இந்த வருடத்திலிருந்தே மதிமுக கண்மணிகள்,
செப்டம்பர்
22 ஆம் நாளை வைகோவின் பிறந்த நாளாக கொண்டாட இருக்கின்றனர்.
எனவே கழக கண்மணிகளே இந்த வருடம் முதல் நமக்கு செப்டம்பர் மாதம் நமக்கு திருவிழா மாதமாக கருதி கொண்டாட வேண்டும்.
தலைவர் வைகோவின் பிறந்த நாளை நாம் நேர்மையின் தினமாக,
ஊழல் ஒழிப்பு தினமாக கூட கொண்டாடும் நாளாக கூட கொண்டாடலாம்.
ஓமன் இணையதள அணி சார்பில் தமிழின முதல்வருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment