ஆசியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் மாநாடு மலேசியா கோலாலம்பூரில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் கலந்துகொள்ள தமிழின படுகொலையாளன் இலங்கை முன்னாள் அதிபர் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழீழ மண்ணில் 140000 தமிழர்களை படுகொலை செய்துவிட்டு அந்த ரத்தக் கறை படிந்த மண்ணில் வாழ்ந்து தமிழினத்தையே கருவறுத்த கொடியவன், கொத்து குண்டுகளை ஐநா தடை செய்த போதும் பயன்படுத்தி சின்னஞ்சிறு பிஞ்சுகளை கொன்றவன், தமிழ் யுவதிகளை வன்புணர்ந்து அழித்த கொடியவன், தமிழர்களை அடிமைகளாக அகதிகளாக உருவாக்கிய கொடுங்கோலன் ராஜபக்சே, தமிழர்கள் வாழும் பூமியாம் மலேசியாவிற்கு வருகை தருவதை எதிர்த்து, தமிழீழம் மலர தனது போராட்டை வாழ்வை 50 ஆண்டுகளுக்கு மேலாக அற்ப்பணித்திருக்கிற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை போல நாடு கடந்தும் தமிழனாக தனது பாரிய அளவிலான பங்கை தமிழீழம் மலர செயலாற்றிக்கொண்டிருக்கின்ற பேராசிரியரும், பினாங்கு துணை முதலமைச்சருமான ராமசாமி அவர்களின் தம்பிமார்களான டேவிட் மார்சல், சதீஸ் முனியாண்டி மற்றும் பெயர் தெரியாத தமிழர்கள், உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அரசியல் கட்சி பாகுபாடு பாராமல் தமிழர் என்ற ஒருமைப்பாட்டில் ஒன்றாக இணைந்து கொடியவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னங்கால் பிடரியில் விழுந்த அடியாக பின்புறமாக தங்கும் விடுதியில் இருந்து ஓட விரட்டியுள்ளதற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர்களான நமது உணர்வுகள் ஐநாவில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நேற்றும் இன்றும் (2016 செப் 1 & 2) நீங்கள் நடத்திய கொடியவன் ராஜபக்சேக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்களை உலகம் கவனித்திருக்கிறது. காலம் மாறும். தமிழர்கள் சுந்தந்திரமாக வாழ ஒரு நாடு கிடைத்து தமிழீழம் சொந்த மண்ணில் மலரும்.
இரிட்டீரியா, மால்டோவா, தெற்கு சூடான் வரிசையில் ஸ்காட்லாந்தும் தனி நாடாகும். அதன் அடிப்படையில் தமிழர்களின் உணர்வுகளும், அவல குரலும் உலக நாடுகளின் செவிகளில் ஆக்ரோசமாக ஒலிக்க அனைத்து நாடுகளின் உண்மையான வெளிப்படையான ஆதரவுடன் தமிழருக்கான விடுதலைக்கு உண்மையான தீர்வு தமிழீழ மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று என்று பிரசல்சில் முதல்முதலாக முழங்கினாரே தென்னாட்டு சிங்கம், நாங்கள் தமிழின முதல்வராக போற்றும் வைகோ அவர்கள் சொன்னது போல தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு ஐநாவின் கண்காணிப்பில் நடக்கும். அந்த நாள் தமிழீழம் மலர்ந்து புலிக்கொடி ஐநாவில் பட்டொளி வீசி பறக்கும்.
அது வரை நமது போராட்ட களங்களை எப்போதும் போல வலுப்படித்திக்கொண்டே இருப்போம். அனைத்து நாட்டில் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க உலக நாடுகள் கவனம் தமிழர்களின் நியாமான கோரிக்கையின் உண்மையை உணர்ந்தே தீரும். கொடியவன் கொட்டம் அடக்க தொடரட்டும் உங்கள் போராட்டம். தொப்புள் கொடி உறவுகள் எப்போதும் உங்கள் விழிகளுக்கு செவிமடுப்பவர்களாகவே இருப்போம். மலேசிய தமிழ் மண்ணில் ராஜபக்சே, மற்றும் அவனை போன்ற இனபடுகொலையாளர்கள் எப்பொழுதுமே கால் பதிக்காதவாறு தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறும் கேட்டுகொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment