காவிரி உரிமை மீட்புக்காக 3 ஆவது நாளாக தொடரும் மாணவர்களின் உண்ணாவிரதம் ஊடக வெளிச்சம் இல்லாமல் மதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
உணவில்லாமல் 3 நாட்கள் கடந்ததையடுத்து தாயகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாணவர்களை சமாதான படுத்தும் முயற்சியில் தலைவர் வைகோ ஐயா முத்தரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.
போராட்டம் வேறு வடிவம் எடுக்கட்டும் என கல்லூரி மாணவர்களுக்கு தலைவர் வைகோ மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வேண்டுகோள் வைத்து வாழ்த்துரையும் வழங்கினார்கள்.
தலைவர்களின் வேண்டுகோளை மாணவர்கள் ஆலோசித்து நிறைவுசெய்ய சம்மதித்த பின்னர், தலைவர் வைகோ பழரசம் கொடுத்து கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத அறப்போராட்டத்தை 19-09-2016 அன்று முடித்து வைத்தார்கள்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாணவ அமைப்பின் பொறுப்பாளர் யுவராஜ் உரை நிகழ்த்தினார்.
மாணர்களின் உண்ணாநிலை அறப்போராட்டம் குறித்து தெரிவிக்கப்பட்ட உடன், நான் தஞ்சையில் இருக்கிறேன். நாளை சென்னை வந்த உடன் மாணவர்களை சந்திக்க வருகிறேன் என்று சொல்லி இன்று 19-09-2016 மாலை உண்ணாவிரத இடமான தாயகத்திற்கு வந்து உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களை சந்தித்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது தலைவர் வைகோ அவர்கள், ஜோக்கர் பட இயக்குநர் ராஜூமுருகனை அழைத்து தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
அதே போல இயக்குநர் கவுதமன் உண்ணாவிரதம் தொடக்கம் முதலே மாணவர்களுடன் இருக்கிறார். மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில செயலாளர் பால.சசிகுமார் அவர்களும் மாணவர்களுக்கு பாதுகாப்பாகவே இருந்து வருகிறார்.
உண்ணாவிரதம் தொடக்க நாளில் மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யா வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து 3 நாட்களும் வைகோ அவர்கள் வந்து மாணவர்கள் உடல் நலனை விசாரித்தார். மதிமுக நிர்வாகிகள் மாணவர்களுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.
மாணவர் போராட்ட வேறு வடிவத்தில் அடுத்த கட்டமாக உருவெடுக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment