திருச்சியில் காவிரி உரிமை காத்திடவும், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும், இன்று 16-09-2016 தமிழகம் முழுதும் மதிமுக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தலைமையில் திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட தொண்டர்களுடன் வைகோ அவர்களும் கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அந்த அடைபட்ட மண்டபத்திலேயே சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் வீரபாண்டியன் தலைமையில் பாசறைக் கூட்டம் நடைபெற்றது. மதிய உணவு வேளையில், வழங்கிய மதிய உணவினை கழக கண்மணிகளோடு அமர்ந்து தானும் பசியாறினார் வைகோ அவர்கள். பின்னர் தரையில் துணி விரித்து கண்மணிகளுடன் தானும் சிறுது இளைப்பாறினார்.
நேற்று திருச்சி மாநாடு. இன்று போராட்டம் அதற்கு முன் தொடர் நிகழ்வுகள். தொடர்ச்சியாக தமிழினத்திற்காக போராடும் ஒரே தலைவன் இன்று காலை தமிழருக்காக நீதியை பெற்று காவிரியில் நீர் பெற்றிட கைது செய்யபட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக மக்களே நல்லவர்களை இனம் காணுங்கள். துரோகிகளை அடித்து விரட்டுங்கள். 200 க்கும் 300 க்கும் தங்கள் தலைமுறையை பாழ்படுத்தாதீர்கள்.
No comments:
Post a Comment