கலிங்கப்பட்டி அதைச்சுற்றி இருக்கும் கிராமங்களில் இருப்பவர்களுக்கு அதிகஅளவு இதயநோய் வருகிறது. இளைஞர்கள் இதயநோய் கண்டறியப்படாமல் திடீரென்று இறக்கின்றார்கள். எனவே சென்னை பில்ராத் மருத்துவமனையுடன் இணைந்து இதய பரிசோதனைமருத்துவ முகாம் செப்டம்பர் 24, 25 ல் கலிங்கப்பட்டி மேல்நிலைப் பள்ளி நடத்தப்படுகிறது.
அதற்க்கான ஏற்ப்பாடுகளை டாக்டர் ரகுராம், சுப்புராஜ், சதன்திருமலைகுமாருடன் மதிமுக மாநில மகளிரணி செயலாளர் ரோஹையா அவர்களும் இணைந்து செயல்படுத்துவார்கள்.
மருத்துவமுகாமில் கலந்துகொள்பவர்களுக்கு முற்றிலும் இலவச பரிசோதனைகள் செய்யப்படும். அறுவை சிக்கிச்சை தேவைப்படின் இலவசமாக சென்னையில் செய்துதரப்படும்.
இலவச இருதய மருத்துவ பரிசோதனை & மற்றும் சிகிச்சை முகாமிற்கான அறிவிப்பு பேனர்களை அனைத்து ஊர்களிலும் வைத்து அறிவிப்பு செய்ய உள்ளனர்.
வைகோ அவர்களின் ஏற்பாட்டின் படி பில்ரோத் மருத்துவமனை மருத்துவ நிபுனர்கள் வரவுள்ளனர். அருகாமையில் உள்ள 200 கிராம மக்கள் பயனுற இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாய்ப்புள்ள நபர்கள் இந்த பரிசோதனையில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாறு ஓமன் இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
வாய்ப்புள்ள நபர்கள் இந்த பரிசோதனையில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாறு ஓமன் இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment