கோவில் பட்டியில் கோவில்பட்டி மற்றும் கயத்தார் ஒன்றியம் , நகரம் செயல்வீரர்கள் கூட்டம் 20/09/2016 நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலுக்கான நிகழ்ந்தது. இந்த மதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
அப்போது செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று இன்று உச்சநீதிமன்றம் 4வாரகாலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அளித்துள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு கிடைத்த நீதி, கடந்த 2007ம் ஆண்டு காவரிநதீ நீர் தீர்ப்பு வந்த பிறகு காவிரி மேலாண்மை அமைப்பதற்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை, அதன் பிறகு வந்த நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசும் அதனை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலானதமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி இன்று வெற்றி கண்டுள்ளது பாராட்டுக்குரியது. மேலும் காவிரி மேலாண்ம வாரியம், காவிரி ஒழங்காற்று குழு உடனடியாக அமைக்க வேண்டும் என்பதனை பிரதமர் மோடியிடம் வலியுறுத்த தமிழக அரசு நடவடிக்கை வேண்டும், அதற்காக தமிழக முதல்வர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி, பிரதமரை சந்திக்க வேண்டும், காவிரிநதி நீர் பிர்ச்சினையில் தமிழகம் அமைதி காத்தது, ஆனால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது உமைகள் தாக்கப்பட்டன. இனிமேலாவது மத்தியரசு உடனடியாக காவிரி நதி நீர் பிரச்சினையில் தீர்வு காண காவிரி மேலாண்மை குழுவினை அமைக்க வேண்டும் என்றார்.
செய்தி: சேது முத்தையா
No comments:
Post a Comment