Saturday, June 3, 2023

மதிமுக ஐந்தாவது அமைப்புத் தேர்தல். தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் 61 மாவட்டங்களில் 25,08,786 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள்.
கிளைக் கழகம், வட்டக் கழகம், பேரூர் கழகம், நகரக் கழகம், ஒன்றியக் கழகம், பகுதிக் கழகம், மாவட்டக் கழகம், மாநகர் மாவட்டக் கழகம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.
நிறைவாக தலைமைக் கழக நிர்வாகிகள், ஆட்சிமன்றக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் 27.05.2023 அன்று வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களைப் போட்டியிடுபவர்கள் 01.06.2023 அன்று தலைமைக் கழகம் தாயகத்தில் தாக்கல் செய்தார்கள்.
இன்று 03.06.2023 பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. எவரும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. எனவே மேற்கண்ட பொறுப்புகளுக்கு வேட்புமனு வழங்கியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.
14.06.2023 அன்று சென்னை, அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் கூடும் கழகத்தின் 29-ஆவது பொதுக்குழு இந்த நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும். அங்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை முறைப்படி அறிவிக்கப்படும்.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு திருமிகு வைகோ அவர்களும், அவைத் தலைவர் பொறுப்பிற்கு திரு ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ் அவர்களும், பொருளாளர் பொறுப்பிற்கு மு.செந்திலதிபன் அவர்களும், முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு திரு துரை வைகோ அவர்களும்,
துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு திரு மல்லை சி.ஏ.சத்யா, திரு ஆ.கு.மணி, திரு ஆடுதுறை இரா.முருகன், திரு தி.மு.இராசேந்திரன், திருமதி டாக்டர் ரொஹையா சேக் முகமது ஆகியோரும்,
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு திரு டாக்டர் சி.கிருஷ்ணன், திருமதி ராணிசெல்வின், திரு கே.ஏ.எம்.நிஜா ம், திரு கே.கழககுமார், திரு க.ஜெய்சங்கர், மதுரை திரு தி.சுப்பையா, திரு பூவை பாபு ஆகியோரும்,
தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு வழக்கறிஞர் இரா.அருணாசலம், வழக்கறிஞர் நாமக்கல் பி.பழனிச்சாமி, வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், வழக்கறிஞர் பாசறை பாபு, பரமக்குடி கே.ஏ.எம்.குணா, மதுரை பி.ஜி.பாண்டியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.06.2023

No comments:

Post a Comment