Friday, April 8, 2016

கழகத்தை உயிர் மூச்சாக கருதும் தொண்டனின் மதிமுக கொடி வண்ணம், பூசிய வீட்டின் சுவரை மறைப்பதா? பாசிச ஜெயலலிதாவின் காவல்துறைக்கு ஓமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனம்!

மதிமுக என்னும் பேரியக்கம் தொடங்கும் முன்பே, தலைவரின் வீர உரைகளாலும், செயல்களாலும் ஈர்க்கப்பட்டு தமிழின முதல்வராக போற்றப்படும் வைகோ அவர்களின் கொள்கைகளை பின்பற்றியும், கழகத்தின் கண்மணிகளுடன் கழக தொடக்கம் முதல் இன்று வரை உறுதியோடு கழகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், ஓமன் மதிமுக இணையதள அணியின் தலைமை உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீரமங்கலம் ஊராட்சியின், முள்ளியான் வயல் என்னும் கிராமத்தை சார்ந்த ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது சொந்த ஊரில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். கடுமையான வறுமையின் மத்தியிலும் கழகத்தின் மேலுள்ள காதலால் கழகத்திற்காக ஆற்றும் பணிகளை அவர் நிறுத்தி வைக்காமல், தன்னாலான பணிகளை உலக மக்களிடத்தில் உணர்ச்சிபூர்வமாக எடுத்து செல்கிறார்.

ஜகுபர் அலி அவர்கள் வைகோ என்ற மனிதனின் கொள்கை பிடிப்பால் வைகோ அவர்களை தீவிரமாக உள்வாங்கியதால், தன்னுடைய வீட்டு சுவர், கதவு மற்றும் ஜன்னல் ஆகிய அனைத்தையும் மதிமுக கொடி தாங்கிய சிகப்பு கருப்பு சிகப்பாக மாற்றியிருந்தார்.

அது மட்டுமலாமல், வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்த வைத்த வாதங்களால், தன்னை மகனாக கருதிய வாஜ்பாய் அவர்களிடத்திலும் பேசி குவைத் நாட்டின் தலால் ஆஸ்மின் என்ற பெண்ணை, ஆந்திர காதர் பாட்சாவுடன் வாழ அனுமதி வாங்கி கொடுத்து மனிநேயத்தால், அந்த பெண்ணின் பெயரையே தனது மூத்த மகளுக்கு (10 வயது இப்போது) பெயராக சூட்டி அழகு பார்த்தார் ஜகுபர் அலி அவர்கள். மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் அனைவருக்குமே கழக கொடி வண்ணத்தினாலான உடையை வாங்கி கொடுத்து ஆனந்தமடைந்தார்.

கழக கொடி வண்ணம் வீட்டை அலங்கரித்திருந்தாலும், வீட்டின் கூரைக்கு மேல் பகுதியிலும் மதிமுக கொடி பறக்க வேண்டுமென்று எண்ணி மதிமுக கொடியை வீட்டில் மேல் மின் இணைப்பு தாங்கி செல்லும் கம்பத்திலே பட்டொளி வீசி பறக்கவிட்டார்.

இதையறிந்த ஜெயலலிதாவின் காவல் துறை 3 வார காலத்திற்கு முன் ஜகுபர் அலி அவர்களின் வீட்டிற்கு வந்து கொடியை கழற்ற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஜகுபர் அலி கொடியை கழற்ற முடியாது, கொடி என்னுடைய வீட்டில்தான் பறக்கிறது. பொது வெளியில் பறக்கவில்லை. இன்று சாயங்காலத்திற்குள் எங்கள் கூட்டணியிலுள்ள 5 கட்சிகளின் கொடியையும் கட்டுவேன் என்று சவால் விட்டு சாயங்காலத்திற்குள் வீட்டின் மேல் 5 கட்சிகளின் கொடியை பறக்கவிட்டுள்ளார்.

அதன் பின்னர் எப்போதும் அவர் வீட்டிற்கு தாலுகா அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகளும் வந்து கொடியை கழற்ற மிரட்டியபடியே இருந்துள்ளனர். சுவரிலோ, கதவிலோ, நீங்கள் உடுத்தும் உடையிலோ கட்சி சின்னம் இருக்க கூடாது என்று பேசி சென்றுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர் என்னுடைய பிள்ளைகள் உடையிலும் மதிமுக கொடிதான் இருக்கிறது எப்படி அகற்ற முடியும் என பேசியிருக்கிறார்.

இப்படி பரபரப்பான சூழலில் ஊர் பெரியவர்கள் சொல்லியதால், அவர்கள் மேலுள்ள மரியாதையால் வீட்டின் மேல் பறக்கவிட்ட கொடியை இறக்கினார்.

ஆனாலும் 5 நாட்களுக்கு முன்னர் தாலுகா அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களின், வீட்டிற்கு வந்து அவருடைய வீட்டின் சுவரில் வரைந்துள்ள மதிமுக கொடியின் நடுவிலுள்ள கருப்பு வண்ணத்தை செய்தி தாள்கள் கொண்டு மறைத்துள்ளனர். இதையும் பொறுத்துக் கொண்டார் ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள்.

இந்நிலையில், நேற்று 07-04-2016 இரவு 9.30 மணி அளவில் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் பயணித்த போது ஒரு காவலர் அவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தார். அவரும் காவலர் சாதாரணமாக அமருகிறார் என்று நினைக்க ஜகுபர் அலி அவர்கள் இரவு பயணத்தால் சிறுது கண் அயர அருகில் இருந்த காவலர் ஜகுபர் அலி அவர்களின் கையில் விலங்கு மாட்டியிருக்கிறார். இந்த விலங்கு மாட்டிய கையோடுதான் துணிவுடன் காவலருடன் சேர்த்து செல்பி எடுத்தி அனுப்பி யிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்டுதான் அருகில் அமர்ந்து கைது செய்திருக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது. உடனே ஜகுபர் அலி அவர்களும் ஏன், எதற்காக கைது செய்துள்ளீர்கள் என்று கேட்க, நீ கட்சி கொடி வைத்து பிரச்சினை செய்கிறாய் என்று சொல்லி புதுக்கோட்டை டவுண் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போதும் ஜகுபர் அலி அவர்கள் என் பிள்ளைகளின் உடையிலும் மதிமுக கொடி இருக்கும், வீட்டு சுவரிலும் இருக்கும். எங்க மனதிலும் நிலைத்திருக்கும் என்று உறுதிபட கூறிவிட்டு, இது குற்றமென்றால் FIR பதிவு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் ஜகுபர் அலி அவர்களிடம், இந்த பிரச்சினை முதலமைச்சர் தனி பிரிவிற்கு சென்றுள்ளது (CM cell) என்று கூறியுள்ளனர். மேலும் இன்று காலை அவரை விடுவித்துள்ளனர்.

இதனால் காவல்துறை ஜனநாயகத்தை அடக்கி ஒடுக்க நினைத்து ஜகுபர் அலி அவர்களை கொடுமை செய்கிறது. இதை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வன்மையான கண்டிக்கிறோம். மேலும் இதே போல அடக்குமுறையில் ஈடுபடகூடாது எனவும் ஜெயலலிதாவின் பாசிச அரசின் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அடக்கி ஆள நினைப்பதால் அடங்கி விடுவார்கள் என நினைத்தால், இன்னும் வேகமாக மதிமுகவும், தொண்டர்களும் வீறுகொண்டெளுவோம் எனவும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

ஜகுபர் அலி அவர்களின் சொந்த வீட்டில், சொந்த செலவில் வரைந்திருக்கும் மதிமுக கொடியை மறைக்கும் ஜெயலலிதாவில் காவல்துறை, ஜெயலலிதாவின் படம் அடங்கிய, உணவகம், மருந்துகடை, கட்டடங்கள், காணொலி காட்சிகள் அனைத்திலும் ஜெயலலிதாவின் படங்களை அகற்றாதது ஏன்?

ஜனனாயகத்திற்கு ஜெயலலிதாவில் ஆட்சியில் இடமில்லாமல் போனதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆணவ போக்கையே காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை பிரவேசம். ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் மயம். இது தவிர்க்கப் படவேண்டும். இதற்கு உறுதுணையாக, கைக்கூலியாக இருக்கும் காவல்துறையயும், ஜெயலலிதா அரசையும் கண்டிக்கிறோம். மே 16 ல் இதற்கு முடிவு கட்டப்படும்.

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வைகோ பாராட்டு!

சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி பீகார் மாநிலத்தை முழுமையான மது இல்லா மாநிலமாகவும், மது போதையற்ற மாநிலமாகவும் மாற்றி அறிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏப்ரல் 1 முதல் பீகார் மாநிலத்தில் பகுதி அளவு மதுவிலக்கையும், 05.4.2016 முதல் முழுமையான மதுவிலக்கையும் அறிவித்து விடுதிகள், பார்கள், கிளப்புகள் என எங்கும் மது அருந்தவும், விற்கவும் தடை விதித்து, அதற்கான உரிமங்களையும் இரத்து செய்துள்ள பீகார் மாநில அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, தற்போதைய தடையால் தேங்கி உள்ள 36 ஆயிரம் லிட்டர் வெளிநாட்டு மதுவகைகளை அழிக்கப்போவதாகவும், அந்த மாநில அரசு துணிச்சலாக முடிவெடுத்துள்ளது.

உள்நாட்டு மது வகைகள் மட்டுமின்றி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மது வகைகளுக்கும் முழுமையான தடை விதித்துள்ள அரசின் முடிவை அம்மாநில பெண்கள் குழந்தைகள் என பலரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று முதலமைச்சருக்கு கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

முழுமையான மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை என்று தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் பிதற்றித் திரிவதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் முழுமையான மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தி சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் உடல்நலத்துடனும் வளமாகவும் வாழ வகை செய்து உண்மையான மக்கள் நலன் பேணும் அரசு தம்முடைய அரசு என்பதை பிரகடனப்படுத்தியுள்ள மாண்புமிகு முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும், மதுவிலக்குப் போராளிகளின் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு கீழ்க்கண்டவாறு வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

நீங்கள் ஆட்சி புரியும் பீகார் மாநிலத்தில் மது அருந்துவதைத் தடுக்க முழு மதுவிலக்கை அமுல்படுத்தியதற்கு எல்லையற்ற மகிழ்ச்சியோடு என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மதுக்கொடுமையால் அழிந்து கொண்டிருக்கும் வேளையில், சரியான நேரத்தில் நீங்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளீர்கள். மதுவுக்கு எதிரான போர் இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையாகும். மதுவை எதிர்த்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நான் சிலுவைப் போர் நடத்தி வருகிறேன்.

மே மாதம் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அத்தகைய அரசு அமைந்ததும் மதுவிலக்குப் பிரச்சினையில் உங்கள் பாதையை தமிழ்நாடு பின்பற்றும். பீகார் மாநில அரசு உங்களுடைய ஆற்றல் மிக்கத் தலைமையில் மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வாழ்த்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’ 
சென்னை - 8 
08.04.2016


Respected Nitish Ji
Vanakkam.

With immense pleasure I convey my greetings for introduction of prohibition against liquor consumption in the state of Bihar. As a Chief Minister your Govt took this bold decision at the right time when thousands of families are ruined due to liqur consumption in India. War against liquor consumption is the need of the hour.

In Tamil Nadu I have launched a crusade for the past 15 years. I am fully confident that DMDK - PWF alliance will win the assembly elections in the month of May and form a coalition Government so that we will follow the path you have shown.

Let the State of Bihar get many more welfare measumes under your steward ship.

With warm regards.
Yours sincerely,
(Vaiko)


ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, April 7, 2016

மாமண்டூர் மாநாட்டு கலந்தாய்வு கூட்டம் தேமுதிக அலுவலகத்தில்!

சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் நடைபெறும் அரசியல் எழுச்சி திருப்புமுனை மாநாட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. 
இக்கூட்டத்தில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஸ் மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்று மாநாட்டு பணிகள் குறித்தும், முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுகம் குறித்தும் கலந்துரையாடினர். 

ஓமன் மதிமுக இணையதள அணி

தேமுதிக -மக்கள் நலக் கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைப்பு!

தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. அப்போது சகோதரர் நாகை திருவள்ளுவன் தலைமையிலான தமிழ்ப் புலிகள் கட்சியும், சகோதரி வீரலட்சுமி தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படையும் புர்வாங்கமான பேச்சுவார்த்தையின் படி தேமுதிக -மக்கள் நலக் கூட்டணியில் இணைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதான வீரலட்சுமி மலர்கொத்தும், நாகை திருவள்ளுவன் சால்வை அணிவித்தும் விஜயகாந்தை கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் அதை நியாய ப் படுத்த விரும்பவில்லை. திமுக மீது சுமத்தப்பட்ட ஆள் இழுக்கும் முயற்சி யை வெளிப்படுத்தியதை மறைக்கவே என் மீதான கருத்தியல் தாக்குதல். பத்திரிக்கை கள் வேண்டுமென்றே என் பேச்சை திரிந்து வெளியிடுகின்றன. பேசாததை எல்லாம் பேசியதாக வெளியிடுகின்றன. குற்றச்சாட்டுகளை மேலும் வலுவாக சொல்வேன். நான் அடங்கி போக மாட்டேன் உண்மைகளை வெளிப்படுத்துவதில். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் செயல்படுபவன் நான் என பேசினார்.

மேலும் மாமண்டூர் மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம் எனவும், கட்டுப்பாட்டுடன் மாநாட்டை நடத்தி காட்ட வேண்டும் என்றூம் விஜயகாந்த் அவர்கள் நிறைவுரை ஆற்றுவார் எனவும் வைகோ தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

அத்வானி மனைவி மறைவிற்கு வைகோ இரங்கல்!

ம தி மு க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மனைவி கமலா அம்மையார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அத்துடன் வைகோ அனுப்பிய இரங்கல் கடிதத்தில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புள்ள திரு அத்வானி அவர்களுக்கு,

வணக்கம். தங்களுடைய அன்பு மனைவி கமலா அம்மையார் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மனிதநேயமும் விருந்தோம்பும் பண்பும் மிக்கவர் கமலா அம்மையார். நீங்கள் இருவரும் மனமொத்த தம்பதியராக ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி இல்லற வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தீர்கள் என்பதை நான் அறிவேன். நான் தங்கள் இல்லத்திற்கு வந்தபோதெல்லாம் அம்மையார் என் மீது காட்டிய பரிவும் பாசமும் மறக்க இயலாதது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்கள் இல்லத்திற்கு நான் வந்தபோது, உங்களுடைய திருமணம் மற்றும் குடும்ப நிகழ்வுகள் அடங்கிய புகைப்படத் தொகுப்பை எனக்குக் காண்பித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். அப்போது அம்மையார் உடல்நலக் குறைவுற்று இருப்பதையும் கூறினீர்கள்.

தங்களுக்கு நேர்ந்துள்ள பேரிழப்பு ஆற்றவொண்ணாதது.

என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அம்மையாருக்கு எனது அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
வைகோ
வைகோ தமது இரங்கல் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நிலையம் மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
07.04.2016

Dear Shri Advani ji,

Vanakkam. I am shocked about the sad demise of your beloved wife Madam Kamala. She was a noble lady of humanism and hospitality. I do know that you were attached to each other like an ideal couple with deep dedication. I can never forget the kind affectionate hospitality shown to me by her whenever I visited your home.

When I came to your house last year in November, you gave me the privilege to see the photographs of your wedding and family functions. At that time, you also told me about her ailment. I could understand the unconsolable grief of yourself.

I extend my deep sorrow and homage, sharing your tears.

With regards,
Yours sincerely,
(Vaiko)

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, April 6, 2016

தொண்டன் நலனிலும் அக்கரை கொள்ளும் தலைவர் வைகோ!

சிங்கப்பூர் மதிமுக இணையதள அணி நண்பர் கூடலூர் மு.கரிகாலன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த செய்தி கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு தெரிந்ததையடுத்து, வைகோ அவர்களின் ஏற்ப்பாட்டில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மு.கரிகாலன் அவர்கள்.

கழக இணையதள் அணி நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தெரிந்த கழக தோழர்கள் தினமும் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்கள். இதனால் அவருக்கு புதிய தெம்பு கிடைத்தது போலிருந்தது. 

இந்நிலையில் இன்று 06-04-2016 காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து உடல் நலன் பற்றி கேட்டு அறிந்து கொண்டார். அப்போது மு.கரிகாலன் அவர்களை இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் தலைவர் வைகோ அவர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, April 5, 2016

விவசாயிகள் போராட்டத்திற்காக மௌன விரதம் கலைத்து கோவில்பட்டி ரயில் மறியலில் வைகோ!

வைகோ அவர்கள் தனது தந்தையார் வையாபுரியார் 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி மறைந்ததையொட்டி அவரது நினைவு நாளான ஏப்ரல் 5 ஆம் தேதி கடந்த 43 வருடங்களாக மௌன விரதம் கடைபிடித்து வந்தார்.

ஆனால் இன்று விவசாயிகள் அறிவித்த ரயில் மறியல் போராட்டத்துக்காக முதல் முறையாக மௌன விரதத்தை கலைத்து, இன்று கோவில்பட்டியில் காலை 10.30 மணிக்கு ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார். 

இரயில் நிலையத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முடியாதபடி தடைகள் அமைத்திருந்தனர்.

எனினும் தடைகளை உடைத்து வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கோவில்பட்டி இரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து வைகோ தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, April 4, 2016

மாமண்டூரில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் பிரச்சார மாநாடு!

செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவுள்ள மாற்று அரசியல் பிரச்சார மாநாட்டுத் திடலை 03.04.2016 அன்று தலைவர்கள் பார்வையிட்டனர்.

ஞாயிறன்று மாநாடு நடைபெறவுள்ள மைதானத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்கள், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு நுழைவாயிலாக இருக்கும் என்றார்.

ஏப்ரல் 10ஆம் தேதி எனது தலைமையில் நடைபெறுகின்ற மாநாட்டில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். இந்த மாநாட்டில் 12 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். பொதுமக்களுக்கு எந்தவித பதிப்பும் இல்லாமல் இந்த மாநாடு நடைபெறும்.

விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், வணிகர்கள் என பல தரப்பு மக்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அமைய உள்ள ஆட்சிக்கு இந்த மாநாடு நுழைவாயிலாக அமையும். உண்மையான கூட்டணி ஆட்சி மாநிலத்தில் அமைய உள்ளது. அதிமுகவிற்கு 12 விழுக்காடும் திமுகாவிற்கு 8 விழுக்காடும் வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் விரும்பும் மாற்றம் உறுதியாக ஏற்படும் என்றார் வைகோ.

பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் மற்றும் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி!

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று ஏப்ரல் 3 ஞாயிறன்று மதுரைக்கு வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குற்றப்பரம்பரை சட்டத்தைஎதிர்த்துப் போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் தியாகிகள்நினைவிடத்தில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகிறேன் என்றார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

ஜெயலலிதா வினையை விதைக்கின்றார். வினையை அறுவடை செய்வார்-வைகோ!

ஆட்சி அதிகாரத்தின் அந்திமக் காலத்தில் இருக்கும் அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த காலத்தில் கிடைத்த படிப்பினைகளால் தன்னைத் திருத்திக் கொள்ளவே இல்லை. அவர் ஒருக்காலும் திருந்தப் போவதும் இல்லை.

மே 16 அன்று நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், எவ்விதத்திலும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முனைந்துவிட்ட ஜெயலலிதா, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்து முடித்து விட்டார்.

அண்ணா திமுக ஆட்சியில் கொள்ளைப் பணத்தைப் பதுக்கி வைத்து, எஜமானியின் உத்தரவுக்கு ஏற்ப வினியோகம் செய்யும் பினாமிகள், ஊழல் பெருச்சாளிகள் வசம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, பட்டுவாடாவுக்குத் தயாராக இருக்கின்றது.

தமிழகக் காவல்துறை மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடுவார் தப்புக்கணக்குப் போட்டு கைகட்டிச் சேவகம் செய்து வருவதால், வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் வழங்க அனைத்து வழிகளிலும் உதவுவார்கள் என்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேர்மையாளராக இருந்தபோதிலும் செயல்பட முடியாத கையாலாகாத நிலைமையில் இருப்பதால், சிறுதாñர் பங்களாவுக்குள் கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் குறித்து உடனடியாகச் சோதனை செய்யாமல், மூன்று நாள்கள் கழித்து அம்மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகிய முதல் அமைச்சரின் எடுபிடிகள் மூலமே பதிலைப் பெற்று, கவைக்கு உதவாத அறிக்கை தந்துள்ளார். எனவே, தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுத்து விடும் என்று, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். உரியவிதத்தில் நாங்களே பணப் பட்டுவாடாவைத் தடுப்போம்; எதையும் எதிர்கொள்வோம்.

மார்ச் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் மாநகரங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பொதுக்கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால் கலக்கமும் ஆத்திரமும் கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா, வழக்கம்போலத் தனது குண்டர் படையை சேலத்தில் ஏவி இருக்கின்றார். சகோதரி பிரேமலதா அவர்கள் தங்கி இருந்த விடுதிக்குள் உருட்டுக் கட்டைகளோடும், அதிமுக கொடிகளோடும் நுழைந்த ஜெயலலிதா கட்சியின் காலிகள், தேமுதிகவையும், அதன் தலைமையையும் எதிர்த்துக் கூச்சல் இட்டதோடு, ‘இனியும் விமர்சித்தால் நடப்பதே வேறு’ என எச்சரிக்கை விடுத்து ரகளை செய்துள்ளனர்.

தேமுதிக கட்சியையும் தலைமையையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் நினைத்து இருந்தால் இக்காலிகளை உதைத்து விரட்டியடித்து இருக்க முடியும். ஆனால் மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடு காத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் எடுபிடிக் காவல்துறை ஏன் இந்தக் குண்டர்களைக் கைது செய்யவில்லை?

ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர், அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சியினரைக் கொடூரமாகத் தாக்கி, பல படுகொலைகளை நிகழ்த்தினார். அதிபர் ஆன பின்னரும் அதே குண்டர்களை, பழுப்புச் சட்டைப் படையினர் என்ற கொலைகாரப் படையாகவே அவ்வப்போது ஏவி வந்தார். அத்தகைய மனநிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா இருக்கின்றார்.

தேமுதிகவின் முக்கியப் பிரசாரகரான சகோதரி பிரேமலதா ஒரு பெண்மணி என்பதைக் கூடக் கருதாமல், ரௌடித்தனத்தில் அதிமுக ஈடுபட்ட காட்டுமிராண்டிச் செயலைத் தமிழகம் முழுவதும் நடத்தலாம் என்று ஆளுங்கட்சியினர் திட்டமிட முனையலாம். காவல்துறை அதற்குக் கைலாகு கொடுக்கலாம். காவல்துறையை நம்பி ஏமாற நாங்கள் தயாராக இல்லை. எங்கள் ஐந்து கட்சிகளின் தொண்டர் படையே தமிழகத்தின் காவல்படையாக மாறும். ஏற்படும் விபரீதங்களுக்கு முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நேற்று சேலத்தில் அதிமுகவினர் நடத்திய அராஜகத்திற்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இனி இந்தச் செயல்களை ஏவி விட முதல் அமைச்சர் நினைத்தால், வினையை விதைக்கின்றார்; வினையைத்தான் அறுவடை செய்வார் என எச்சரிக்கின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி