செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவுள்ள மாற்று அரசியல் பிரச்சார மாநாட்டுத் திடலை 03.04.2016 அன்று தலைவர்கள் பார்வையிட்டனர்.
ஞாயிறன்று மாநாடு நடைபெறவுள்ள மைதானத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்கள், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு நுழைவாயிலாக இருக்கும் என்றார்.
ஏப்ரல் 10ஆம் தேதி எனது தலைமையில் நடைபெறுகின்ற மாநாட்டில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். இந்த மாநாட்டில் 12 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். பொதுமக்களுக்கு எந்தவித பதிப்பும் இல்லாமல் இந்த மாநாடு நடைபெறும்.
விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், வணிகர்கள் என பல தரப்பு மக்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அமைய உள்ள ஆட்சிக்கு இந்த மாநாடு நுழைவாயிலாக அமையும். உண்மையான கூட்டணி ஆட்சி மாநிலத்தில் அமைய உள்ளது. அதிமுகவிற்கு 12 விழுக்காடும் திமுகாவிற்கு 8 விழுக்காடும் வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் விரும்பும் மாற்றம் உறுதியாக ஏற்படும் என்றார் வைகோ.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் மற்றும் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment