கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்ட எல்லையான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான தமிழின முதல்வர் வைகோவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தியிருக்கின்றனர் திமுகவினர். அதை தடுக்கக்கோரி நெல்லை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தந்திருக்கிறார் காவல்கிணறு பகுதியை சேர்ந்த மதிமுக இணையதள அணி முக்கிய நிர்வாகி வால்டேர் வில்லியம்ஸ் அவர்கள்.
அப்போது அந்த அலுவகத்தில் பணிபுரிந்த திமுக கைக்கூலி காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்கமுடியாது என்ற தொனியில் பேச, அலைபேசியினோடே வாக்குவாதம் ஏற்ப்பட்டிருக்கிறது.
அதனால் மீது பொய் வழக்கு பதிவு செய்து வால்டேர் வில்லியம்ஸ் அவர்களை கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறை சாலையில் கடந்த நான்கு நாட்களாக அடைத்து வைத்து பரோலில் நேற்று வீடு திரும்பியிருக்கிறார். இதை ஓமன் மதிமுக இணையதள அணி கடுமையாக கண்டிக்கிறது.
குற்றமற்ற வார்த்தை பேசியதற்கு, குற்ற பொருள்படி ஆகிவிட்டதே என சிந்தித்து தாயுள்ளத்தோடு மன்னிக்க வேண்டுகிறேன் என பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் தான் நெஞ்சில் சுமக்கும் தலைவனின் உருவ படத்தை எரித்தால் புகார் கொடுக்காமல் கொஞ்சி விளையாட வேண்டுமா? இந்திரா காந்தியை எவ்வளவு கேவலமாக வக்கிர புத்தியில் பேசிய பிறகும் கருணா நிதி அவர்கள் மன்னிப்பு கேட்க வில்லையே. இதுதான் உங்கள் தலைவனின் நற்பண்பா? அடக்கி வாசியுங்கள். இல்லையென்றால் அடக்கப் படுவீர்கள் என அடக்கத்தோடு தெரிவிக்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment