தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க அமைந்திருக்கும் நமது வெற்றிக்கூட்டணியான தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் வருகின்ற 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே ஆண்டார் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாமண்டூரில் “தேர்தல் சிறப்பு மாநாடு” நடைபெறவுள்ளது.
அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் திரு.வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக,திரு. ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் சி.பி.ஐ(எம்), திரு.தொல்.திருமாவளவன், தலைவர் வி.சி.க, திரு.இரா.முத்தரசன் மாநில செயலாளர் சி.பி.ஐ, ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றுகிறார்கள். முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்கள்.
தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் அனைத்து கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நாட்டு நலனில் அக்கறைகொண்ட நல்லவர்களோடும் அணிதிரண்டு வந்து, இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடந்திடும் வகையில் அலைகடலென திரண்டு ஆர்ப்பரித்து வாரீர்! மாநாட்டை வெற்றி பெற செய்வீர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment