மறுமலர்ச்சி தி மு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
எனவே, ஏப்ரல் 26 ஆம் தேதி வரையிலும் அறிவிக்கப்பட்டு இருந்த வைகோவின் முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் ஒரு சிறிய மாறுதல் செய்யப்படுகிறது.
திருத்தப்பட்ட சுற்றுப்பயண விவரம்:
ஏப்ரல் 25 திங்கள் காலை கோவில்பட்டி வேட்புமனு தாக்கல்
மாலை: சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம்
ஏப்ரல் 26 செவ்வாய் -பிற்பகல் 3 மணி முதல் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவினாசி, பெருந்துறை. ஈரோடு மேற்கு தொகுதிகளில் சுற்றுப் பயணம்
ஏப்ரல் 27 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உளுந்தூர்பேட்டை தொகுதி கிராம சுற்றுப்பயணம். தொடர்ந்து விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம்.
No comments:
Post a Comment