தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வைகோ அவர்கள் தனது பிரச்சாரத்தை 17.04.2016 இன்று மாலை தொடங்கி ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும், போடி தொகுதி வேட்பாளர் வீரபத்திரன் அவர்களையும் அறிமுகம் செய்து முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
தொடர்ந்துமதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள தேவர் திருமகனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, தேவர் சிலைக்கு அருகில் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் ஆ.பாஸ்கரசேதுபதி அவர்களை அறிமுகம் செய்து பம்பரம் சின்னத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
மாலை 7:00 மணிக்கு மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தேவர் சிலைக்கு அருகில் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் சீனிவாசன் அவர்களை அறிமுகம் செய்து முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
மாலை 7:30 மணிக்கு மதுரை மாவட்டம் காளவாசலில் மதுரை மேற்கு தொகுதி சி.பி.எம் வேட்பாளர் வாசுகி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
இரவு 8:30 மணிக்கு மதுரை மாவட்டம் ஒபிபுல்லாப் படித்துறையில் மதுரை தெற்கு தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் புதூர் பூமிநாதன் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
வைகோ அவர்கள் பிரச்சாரம் செய்த இடமெல்லாம் மக்கள் கூட்டம் குவிந்தது. மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா தொண்டர்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு பணியாற்றுகிறார்கள். வருகிற தேர்தல் ஒரு நல்ல மாற்றம் ஏற்ப்படும் என்பதற்கு இந்த மக்கள் கூட்டமே சான்று.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment