10-04-2016 மாலை 5 மணி அளவில் மாமண்டூரில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா தேர்தல் சிறப்பு பிரச்சார கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தலைமை தாங்க தேமுதிக இளைஞர் அணி செயலாலர் சுதீஸ் வரவேற்று பேசினார். இசை நிகழ்ச்சிகள் முழங்க தொண்டர்கள் 15 லட்சத்திற்கும் மேல் திரண்டிருந்தனர். தலைவர்கள் அனைவருக்கும் ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டது..
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு செயலாளர் இரா முத்தரசன் அவர்கள் பேசும்போது, நாங்கள் ஆட்சி அமைத்தால் விவசாயம் மற்றும் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்வோம்.
வேட்பாளர் கூட அமராத மேடையில் ஜெ. மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று கூறுகிறார். அண்ணன் வைகோ அவர்கள் மதுவிலக்கை வலியுறுத்தி 1500 கி.மீ. நடந்தார். குமரி அனந்தன் நடைபயணம் மேற்கொண்டார் சசிபெருமாள் மரணத்தை ஒட்டி நாங்கள் முழுக்கடையடப்பை நடத்தினோம்.
கோவன் மதுவிலக்கை வலியுறுத்தி பாடலுக்கு தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன் மதுவிலக்கை அமுல் படுத்த முடியாது என்றார். அப்பொழுது வாய் திறக்காத ஜெயலலிதா மக்களை ஏமாற்றுவதற்க்காக மதுவிலக்கை அறிவிக்கிறார் என பேசினார்.
தொல்.திருமாவளவன் பேசும்போது, கூட்டணிக் கனவு நனவானது போல் கூட்டணி ஆட்சிக் கனவு மே19ல் நனவாகப் போகிறது. கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஆனால் நான் முதல்வர் ஆனது போல். விஜயகாந்த் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் அனைவரும் இணைந்து அறிவிப்போம் என உணர்ச்சியுரையாற்றினார்.
ஜி.கே.வாசன் பேசும்போது, இங்கு ஆறு தலைவர்கள் இருக்கிறார்கள். நான் தவறு செய்தால் மற்ற தலைவர்கள் தட்டி கேட்கலாம். இதுதான் ஜனநாயகம். மக்களாட்சி என்றார்.
ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வருவோம் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம். ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம் - விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாய பம்பு செட்களுக்கு, விண்ணப்பித்த ஒரு வாரத்தற்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
கல்விக்கடன்களை அரசே ஏற்கும். வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தும்
வேலை கிடைக்கும் வரை அணைத்து பட்டதாரிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். ஆயிரம் ஏளனங்களையும், அவமானங்களையும் அவதூறுகளையும், பழிச்சொற்க்களையும் தாங்கிக்கொண்டுதான் இந்தக்கூட்டனியை வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம் என பேசினார் வைகோ.
முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் அவர்கள் பேசும்போது, கலைஞருக்கு எதிரி ஜெயலலிதா! ஜெயலலிதாவிற்கு எதிரி கலைஞர்! இருவருக்கும் எதிரி இந்த விஜயகாந்த்! ஆனால் ஸ்டாலினுக்கு எதிரி ஸ்டாலின் தான் என் பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜயகாந்த், இத்தனை நாளும் கடையை திறந்து வைத்துவிட்டு, இப்பவந்து படிப்படியாக மதுக்கடையை அடைப்பேன்னு சொல்கிறார் ஜெயலலிதா. இதை தானே எங்க அண்ணன் வைகோ வருஷக் கணக்கில் சொன்னார், தமிழ்நாடு முழுக்க கால்கடுக்க நடந்தார். அண்ணன் திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் நாங்கலாம் போராட்டம் செய்தோம் அப்பலாம் கடையை அடைக்காத ஜெயலலிதா இப்ப ஆட்சி முடிந்த பிறகு அடைப்பதாக சொல்கிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வருவோம் மதுக்கடைகளை அடைப்போம், மக்கள் நலக் கூட்டனி, தேமுதிக, தமாகா கூட்டணி ஆட்சிக்கு நிச்சயம் வரும் மதுக்கடைகளை முற்றிலும் தடை செய்யும் என் பேசினார்.
No comments:
Post a Comment