கரூர் மாவட்ட மதிமுக சார்பில் மாற்றுக் கட்சி தோழர்கள் மதிமுக வில் இணையும் நிகழ்வு இன்று நடந்தது.
இதில் ஆயிரக்கனக்கான பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தோழர்களும் எந்தக் கட்சியும் சாராத புதிய இளைஞர்களும், மகளிரும் பெரும் திரளான அளவில் தங்களை மதிமுக மாவட்ட மற்றும் மாநில மதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை மதிமுகவில் இணைத்துக் கொண்டனர்
பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை மதிமுக வில் இணைக்கும் விழாவில் அரங்கமே கொள்ளாத அளவிற்கு பெண்களும், மாற்று கட்சியை சார்ந்தவர்களும், இளைஞர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கரூர் நிகழ்வால், அந்த மாவட்டத்தில் அதிமுக திமுக வை சேர்ந்தவர்கள் கலக்கத்தில் உள்ளதாக அறியப்படுகிறது. எதிரிகளின் கூடாரத்திற்கே சென்று வெற்றி ஈட்டிய சிதறடித்த வெற்றிக் களிப்பில் கரூர் மாவட்ட மதிமுக இருக்கிறது.
இதை சாத்தியப்படுத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணன் பழனிவேல், மாணவர் அணி அமைப்பாளர் காமராஜ், ஒருங்கிணைத்து நிகழ்வை வெற்றிகரமாக்கிய கபினி பாலச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment