சிங்கப்பூர் மதிமுக இணையதள அணி நண்பர் கூடலூர் மு.கரிகாலன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த செய்தி கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு தெரிந்ததையடுத்து, வைகோ அவர்களின் ஏற்ப்பாட்டில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மு.கரிகாலன் அவர்கள்.
கழக இணையதள் அணி நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தெரிந்த கழக தோழர்கள் தினமும் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்கள். இதனால் அவருக்கு புதிய தெம்பு கிடைத்தது போலிருந்தது.
இந்நிலையில் இன்று 06-04-2016 காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து உடல் நலன் பற்றி கேட்டு அறிந்து கொண்டார். அப்போது மு.கரிகாலன் அவர்களை இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் தலைவர் வைகோ அவர்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment