ஆயிரம் விளக்கு பகுதியில் மதிமுக வேட்பாளர் திரு.ரெட் சன் அம்பிகாபதி அவர்களை ஆதரித்து தலைவர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
கொளத்தூர் தேமுதிக வேட்பாளர் மதிவாணன் அவர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
பெரம்பூர் தொகுதியில் கல்லூரி மாணவர்கள் தலைவர் வைகோ அவர்களை வரவேற்றார்கள். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க்கு பெரம்பூர் தொகுதியில் ஆதரவு திரட்டினார் தலைவர் வைகோ.
துறைமுகம் பகுதி மதிமுக வேட்பாளர் அண்ணன் முராத் புகாரி அவர்களை ஆதரித்து தலைவர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
இசை முரசு நெல்லை அபுபக்கர் பாடிய பாடல் தொகுப்பை தலைவர் வைகோ வெளியிட்டார். இஸ்லாமிய சகோதரர்கள் நிறைந்த துறைமுகம் தொகுதியில் அவர்களின் நேர்மை பற்றி விளக்கினார்.
அண்ணா வும் காயிதே மில்லத் அவர்கள் ஏற்படுத்திய சமூக நல்லிணக்கத்தை கெடுக்க மத்திய அரசு முயல்கிறது என குற்றம் சாட்டினார்.
பாங்கு (தொழுகை) ஓதப்படுவதால் தலைவர் பேச்சை நிறுத்தி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கினார்.
பொது சிவில் சட்டத்திற்கு ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓட்டு போட்டவர்கள் திமுகவினரும் பாமகவினரும். எதிர்த்தது மதிமுக மட்டுமே என வைகோ விளக்கி கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வைத்தியநாதன் தெருவில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடும் வி.சி.கட்சி வேட்பாளருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றிஆர் வைகோ.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment