வேலு நாச்சியார் நாடகம் 13-04-2016 மாலை 5. 30 மணி நாரதகானசபா, ஆழ்வார்பேட்டை, சென்னையில் வைத்து நடந்தது. நாடகம் தொடங்குவதற்கு முன் ஆசிரியருடன் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நாடகம் பற்றி கலந்துரையாடினார்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வருகையையொட்டி அவர்களை வரவேற்க ஒவ்வொரு தலைவர்களும் வந்தனர்.
நாடகம் முடிந்ததும் பேசிய கவிக்கோ அவர்கள், இந்த நாடகம் பார்த்ததும் இப்போது போருக்கு கூப்பிட்டாலும் வருவேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார் வைகோ அவர்கள்.
வைகோ அவர்களின் துணைவியார் திருமதி வைகோ அவர்கள், வீரத்தாய் வேலுநாச்சியாரை நம் கண் முன்னே உலவவிட்ட ஜோதி ராம் ஷர்மா அவர்களுக்கும், முதல் தற்கொலைப்படை வீராங்கனை குயிலியாய் உணர்ச்சி மேலிட நடித்த நடிகை ப்ரியதர்சினிக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.
வைகோ அவர்கள் பேசும்போது, மலர இருக்கின்ற மக்கள் நலக் கூட்டணி தேமுதிக ஆட்சியில், வீரத்தாய் வேலு நாச்சியார் அவர்களின் வரலாறு பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment