அண்ணாநகர் விஜயஸ்ரீ மஹாலில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பாக 14.04.2016 வெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழாவானது
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது.
2016 சட்டமன்ற கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் அவர்கள் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய தலைவர் வைகோ அவர்கள், பொடா சிறைவாசத்தின் போது வாலிபால் டீம் வைத்து விளையாடினோம். அதை பார்த்து அன்றைய ஜெயிலர் வெளியிலிருந்து புகழ்பெற்ற அணியை போட்டிக்கு அழைத்திருந்தார். அதில் நான் தயாரித்திருந்த அணி , நான் பங்கேற்காத அணி மூன்று முறை தோற்றது. அதை பார்த்து வெளியிலிருந்து வந்த அணியின் கேப்டன் ஏளனமாக சிரித்தார். 2000 கைதிகளின் முகமும் வாடியது.
உடனே நான் இறங்கினேன். ஷார்ட்ஸ் மாட்டினேன். பனியன் அணிந்தேன். களத்தில் இறங்கினேன். சர்வீஸும் போட்டேன். செண்டரிலும் ஆடினேன். தொடர்ந்து 5 முறை வென்றோம்.
No comments:
Post a Comment