மதிமுகவின் கடை கோடி தொண்டனில் உண்மை தொண்டன் ஜகுபர் அலி அவர்கள் மதிமுக கொடியை வீட்டின் மேல் பகுதியில் கட்டினார், வீட்டு சுவரின் மதிமுக கொடி வண்ணத்தில் வரைந்திருந்தார். மதிமுக கொடி தாங்கிய உடையை மகள்களுக்கு அணிய கொடுத்தார் என்பதற்காக பாசிச ஜெயலலிதாவின் காவல்துறை ஜகுபர் அலி அவர்களை தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் 07-04-2016 அன்று இரவு கைது செய்து 08-04-2016 அன்று காலை விடுதலை செய்தது.
அவரை கைது செய்ததற்கு ஓமன் மதிமுக இணையதள அணி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் வாழும் கழக கண்மணிகளும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
மேலும் ஜகுபர் அலி அவர்களுக்கு அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள். அதை ஜகுபர் அலி அவர்களும் தெரிவித்தார். நண்பர்களும் ஜகுபர் அலிக்கு அழைத்து பேசியதாகவும் தெரிவித்தார்கள்.
அப்படிபட்ட வேங்கை எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஜகுபர் அலி அவர்கள் நேற்றைய விடுதலையை தொடர்ந்து நாளை மாமண்டூரில் மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா தேர்தல் சிறப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். குடும்பத்தினர் அவருக்கு முன்னறிவிக்காமல், ஆச்சரியமூட்டும் வகையில் புத்தாடை எடுத்து கொடுத்து வெற்றிக்காக உழைத்திட வழி அனுப்பி வைக்கிறார்கள். லட்சியங்களை வென்றெடுக்கும் கூட்டத்திற்கு, தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்க போகும் தேர்தல் சிறப்பு கூட்டத்திற்கு செல்கிறார். எந்த தலைவனை 23 வருடங்களுக்கு மேலாக நெஞ்சில் பூஜிக்கிறாரோ அவரை காண செல்கிறார். மதிமுக கொடி தாங்கிய வேட்டி, துண்டு அணிந்து செல்கிறார்.
ஜெயலலிதாவின் காவல்துறை அவரை மாமண்டூரில் கைது செய்ய துணியுமா? புலியின் கோட்டைக்குள் நுழைந்து லட்சகணக்கான தொண்டர்களின் உடையில் இருக்கும் கழக கொடியை மறைக்க முடியுமா? புயலின் பாய்ச்சலுக்கும் புலிகளின் உறுமலுக்கும் எதிர் திசையில் கூட செல்லதான் முடியுமா?
நாளை உலகமே வியக்கும்படியான தமிழக அரசியலில் தேர்தல் சிறப்பு மாநாடு. மே 16 ல் வெற்றி என்னும் தேர்வை எழுதும் நாளுக்கான கட்டியம் கூறும் மாநாடு. மே 19 வெற்றி சான்றிதளை பெறப்போகும் மாநாடு.
அடிமைகள் கூட்டத்தையும், திருடர்கள் கூட்டத்தையும் அரசியலில் இருந்து அகற்ற அலைகடலென திரண்டு வாருங்கள் தோழர்களே. வெற்றி சரித்திரம் படைப்போம். பம்பரமாய் சுழன்று வெற்றி முரசு கொட்டுவோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment