Sunday, June 12, 2016

ஏழு தமிழர் விடுதலைக்கான பேரணி எழுப்பூரில் தொடங்கி கோட்டை வரை!

ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதற்கு எந்த குற்றமும் செய்யாத, பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், சந்திரசேகரன், ஜெயகுமார் உள்ளிட்டோர்  11-06-2016 அன்று 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் கழித்து நிறைவடைந்தது. இதற்கு தமிழக அரசு இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று ஆணையிட்டது. ஆனால் இந்த விடுதலைக்கு மத்திய அரசு முட்டுகட்டை போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 25 ஆண்டு நிறைவடையும் நிலையில், தமிழக அரசின் ஏழுபேர் விடுதலைக்கு ஆதரவு சேர்க்கும் பொருட்டு வாகன பேரணியானது சென்னை எழும்பூரிலிருந்து தமிழக செயலகம் வரை சென்று விடுதலை கோரிய மனுவினை முதல்வரிடத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கையளிக்க தீர்மானிக்கப்பட்டு பேரணி நடந்தேறியது.

அந்த பேரணியில் மதிமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்துகொண்டு வீர முழக்கங்களை எழுப்பினார். அன்பு மணியும் உடனிருந்து முழக்கங்களை எழுப்பினார்.

இந்த விடுதலை பேரணியில், திரு.த.வெள்ளையன், திரு.கோவை ராமகிருஷ்ணன், திரு.விடுதலை ராசேந்திரன், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், திரு.அய்ய நாதன், பத்திரிக்கையாளர் திரு.டி.எஸ்.எஸ்.மணி .ஆவல் கணேசன், இயக்குனர்கள் திரு.கவுதமன், விக்ரமன், ரமேஷ்கண்ணா, ஜன நாதன், அமீர், ராம், நடிகர்கள் திரு.சத்யராஜ், திரு.நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதிமுக சார்பில் கழக துணைப் பொதுசெயலாளர் திரு.மல்லை சத்யா, மாவட்ட கழக செயலாளர்கள் திரு.ஜீவன், கழக குமார், சுப்பிரமணி , உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



பாமக சார்பில் திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலுவும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் து.பொ.செ. திரு.வன்னி அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி திரு.வேல்முருகன் மற்றும் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.


பேரணி நிறைவுபெற்று விடுதலைக்கான மனுவை அற்புதம்மாள் கையளித்தார். அதை அரசு அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

இந்த பேரணி நடைபெற்றுக்கொண்டிர்ந்த போது, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அலைபேசி வாயிலாக பேட்டியளித்த மதிமுக செயலாளர் வைகோ அவர்கள், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும், என் மனமெல்லாம் அங்கேதான் இருக்கிறது. எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி முடியவில்லையென்றால் மூன்று மாதங்களுக்கு மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பரோலிலாவது விட முயற்சி எடுக்க வேண்டும். 



இதில் ஐவரோடு ஒன்றரை ஆண்டு காலம் சிறையில் கழித்திருக்கிறேன். மிகவும் நல்லவர்கள். தனிமைச்சிறையை வெளிக்காட்டி கொள்ளதவர்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்டால். தமிழக முதல்வரை வரலாறு வாழ்த்தும். இது உலகெங்கும் வாழ்கின்ற 10 கோடி தமிழர்களின் விருப்பம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என தெரிவித்தார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, June 11, 2016

மாவட்ட கழக நிர்வாகிகளை சந்திக்க வருகிறார் வைகோ!

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு, மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்களை ஒவ்வொரு மாவட்டம் தோறூம் தனது சுற்றுபயணத்தை மேற்கொள்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். 

எந்த மாவட்ட நிர்வாகிகளை எந்த நாள் சந்திக்கிறார் என்ற அட்டவணை தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணைப்படி கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அனைவரும் கலந்துகொண்டு கழக வளர்ச்சிக்காக கலந்துரையாடி முன்னேற்ற பாதைகளை அமைக்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, June 10, 2016

தமிழ்கடல் நெல்லை கண்ணன் அவர்களை சந்தித்தார் வைகோ!

தமிழ்க்கடல் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களை நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் தலைவர் வைகோ அவர்கள் மரியாதை நிமித்தமாக 10-06-2016 இன்று மாலை சந்தித்து உரையாடினார். 

அப்போது மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ நிஜாம் உள்ளிட்ட கழக முன்னனியினர் உடனிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, June 9, 2016

கருங்குளம் ஒன்றிய செயலாளர் கந்தசாமி இல்ல மணவிழாவில் வைகோ!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய செயலாளர் காலாங்கரை கந்தசாமி இல்ல மணவிழா இன்று 09-06-2016 நடந்தது.

தமிழின முதல்வர் வைகோ அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி சிறப்பித்தார்கள்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், கழக முன்னணியினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மரபணு மாற்றுப் பருத்தி ரகங்களை வேறெந்த வடிவத்திலும் பயிரிட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வைகோ வேண்டுகோள்!

மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்றாக புதிய வகை பருத்தியை மத்திய அரசு அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேசில்லஸ் துரிஞ்சின்சிஸ் - பி.டி (Bacillus Thuringiensis -BT) என்பது மண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிர் ஆகும். இதில் உள்ள புரதம் பருத்திச் செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உடையது என்று கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதைகளை உருவாக்கின. அதாவது பி.டி. நுண்ணுயிரியின் புரதத்தை எடுத்து பருத்திச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்தி, காய்ப்புழு தாக்காத பருத்தியை உற்பத்தி செய்தன.

மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை பி.டி.விதைகள் என்று அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம் சந்தைக்குக் கொண்டு வந்தது. அதன் துணை நிறுவனமான மஹிகோஇந்தியாவில் பி.டி. பருத்தி சாகுபடி மூலம் மகசூல் பெருகும் பி.டி.பருத்திச் செடிகளை காய்ப்புழுக்கள் அழித்து விடாமல் பாதுகாக்க முடியும் என்றெல்லாம் விளம்பரப் படுத்தியது.

இந்தியாவில் மரபணு மாற்று பருத்தி சாகுபடிக்கு மரபீனிப் பொறியியல் ஏற்புக்குழு 2002, மார்ச்சில் அனுமதி அளித்தது. இந்திய அரசின் அங்கீகாரத்துடன் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம் பி.டி. பருத்தி விதைகளை இங்கு தாராளமாக சந்தையில் விற்கத் தொடங்கியது. இதன் கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும், மத்திய அரசு வழங்கி உள்ள அனுமதியாலும் மராட்டிய மாநிலத்தில் விதர்பா மாவட்ட விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பி.டி. பருத்தி விதைகளை வாங்கிப் பயிரிட்டனர். ஆனால், ‘மஹிகோநிறுவனத்தின் பி.டி. பருத்தி விதைகள், விவசாயிகள் எப்போதும் பயிரிடும் பருத்தி ரகங்களைக் காட்டிலும் குறைவான முளைப்புத்திறன் கொண்டிருந்தன. முளைத்துப் பயிரான பருத்திச் செடிகளின் இலைகளை உட்கொண்ட ஆடு, மாடுகள் பலி ஆகின. பருத்திச் செடிகளில் இருந்த காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல், அவை மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்று முன்பைவிட அதிகமாக செடிகளை அழிக்கத் தொடங்கின. உடனே மான்சான்டோ நிறுவனம் தனது தயாரிப்பான பூச்சிக்கொல்லி மருந்துகளை அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் இதனையும் அதிக விலை கொடுத்து வாங்கி, பருத்தி வயல்களில் பயன்படுத்தினர். ஆனால், காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுவரை அறிந்திருந்த புதிய வகை பூச்சிகளும், நோய்களும் பருத்திச் செடிகளைத் தாக்கின. புகையிலை வளைய வைரஸ் புதிதாக பி.டி. பருத்தியை தாக்கியது. அதற்கும் ஒரு மருந்தை மஹிகோநிறுவனம் விவசாயிகள் தலையில் கட்டியது. இவ்வளவுக்குப் பிறகும் பி.டி. பருத்தி விளைச்சல் பாரம்பரிய பருத்தியைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது. நிலமும் மலடாகிப் போயின. நட்டத்தைத் தாங்க முடியாத விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். மராட்டியம், ஒரிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடனாளிகள் ஆகி, முடிவில் தற்கொலை செய்துகொள்ளக் காரணமாயிற்று. பி.டி. பருத்தி சாகுபடியால், தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பி.டி.பருத்தி விதைகளை விற்பனை செய்த மஹிகோநிறுவனத்திடம் விவசாயிகள் நட்ட ஈடும் பெற முடியவில்லை.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோஇந்தியா போன்ற நாடுகளில் மரபு சார்ந்த மறுசுழற்சி முறையிலான விவசாயத்தை ஒழித்து, விதைச்சந்தையை கைப்பற்றுவது, விதைகளுக்கு காப்புரிமைப் பெற்று ஏகபோகமாக சந்தையை கைப்பற்றுவது, வடிவுரிமைகளை மீறியதாக வழக்குத் தொடுத்து சிறு விவசாயிகளை அழிப்பது, உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றப்பட்ட பி.டி. வகை விளைப் பொருட்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தூண்டுவது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

நமது விவசாயத்தின் தற்சார்பை அழிக்கும் மான்சான்டோநிறுவனத்தின் பி.டி. பருத்திக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பி.டி. பருத்திக்கு மாற்றாக மரபணு ஆராய்ச்சி மூலம், மரபு சார்ந்த வகை பருத்தியை அறிமுகம் செய்யப்போவதாக விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகமும் (CSIR) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையும் (DBT) தெரிவித்துள்ளன.

மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்திக்கு மாற்று என்ற பெயரால் மீண்டும் மான்சான்டோவின் மரபீனி பருத்தி விதைகளையே வேறொரு வடிவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக ஐயப்பாடு எழுந்துள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட பருத்தியை எந்த வடிவத்திலும் பயிரிட அனுமதிக்கக்கூடாது; நமது பாரம்பரிய பருத்தி ரகங்களைப் பாதுகாத்து, வேளாண் துறையில் தற்சார்பை காக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, June 8, 2016

துணை பொதுச் செயலாளர் நாசரேத துரை அவர்களை சந்தித்தார் வைகோ!

தூத்துக்குடியில் மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் நாசரேத் துரை அவர்களின் நாசரேத் இல்லத்திற்கு தமிழின முதல்வர் வைகோ அவர்கள், 08.06.2016 இன்று மாலை ஆறு மணியளவில் வருகை தந்தார். மூன்று மணிநேரம் பல நிகழ்வுகளை நினைவுகூா்ந்து உரையாடினார்கள்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட அவைத்தலைவர் நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் குரு. மத்தேயு ஜெபசிங் , ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரஞ்சன், நாசரேத் நகர செயலாளர் ராபர்ட் ,நகர துணை செயலாளர் பீம்சிங், நாசரேத் நகர ம.தி.மு.க. நிர்வாகிகள் சின்னக் கண்ணன், பாபு செல்வன் , தங்கமுத்து , மோகன்சிங், சுடலைமுத்து , சுந்தர் , செல்வாஸ் செல்வன் , மாடசாமி, அந்தோனி, செல்வராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நெல்லை மாநகா் மாவட்ட செயலாளர் நிஜாம் அவர்களும் வருகை தந்தாா்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, June 6, 2016

உங்கள் முகம் மலர மதிமுகம் தொலைக்காட்சி அறிமுகம்!

நேர்மையான நடுநிலையான தொலைக்காட்சியாக செயல்படுவதுடன், இருட்டடிக்கப்படும் கழக செய்திகளையும் ஒளிபரப்பப்படும் என மதிமுகம் தொலைக்காட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது நடுநிலையாளர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. உண்மை செய்திகளும் பாமர மக்களையும் தினமும் சென்றடைய இந்த தொலைக்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது நிதர்சனம்.

இப்போது மதிமுகம் தொலைக்காட்சியானது கேபிள் பயன்படுத்துவோர் கண்டுகளிக்கும் விதமாக சோதனை ஓட்டமாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்த முயற்ச்சியை மேற்க்கொண்டிருக்கும் மதிமுகம் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, June 5, 2016

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் 121-ஆவது பிறந்தநாள், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் மலர் அஞ்சலி!

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் 121-ஆவது பிறந்தநாளையொட்டி இன்று (5.6.2016 ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவு இடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் மலர்ப் போர்வை போர்த்தினார்.

 
சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, தலைமை நிலைய துணைச் செயலாளர் கே.வி.மலுக்காமலி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, June 4, 2016

ராஜீவ் கொலை வழக்கில் தவறாக சேர்கப்பட்டு 25 ஆண்டுகளாக மதுரை சிறையில் வாடும் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரனை சந்தித்தார் வைகோ!

ராஜீவ் கொலைவழக்கில் தவறாக சேர்கப்பட்டு 25 ஆண்டுகளாக மதுரை சிறையில், இப்போது உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன்‬ அவர்களை காண சென்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர்கள், அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் கருணை அடிப்படையில் தமிழக அரசு உடனே விடுதலை செய்யவேண்டும் என மதுரை மத்திய சிறை வாயிலில் பேட்டியளித்தார்.

அப்போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் தி.மு.‪இராசேந்திரன், மதுரை மாவட்ட செயலாளர் பொடா ‎பூமிநாதன்‬ மற்றும் கழக வழக்கறிஞர்கள் புடைசூழ அங்கு இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மதுரையில் "உரக்கச் சொல்வோம் ஊருக்கு" - வைகோ முழக்கம்!

இன்று 04-06-2006 மாலை 5 மணிக்கு "உரக்கச் சொல்வோம் ஊருக்கு" - கருத்தரங்கம் மதுரை மாநகர் கோ.புதூரில் மனிதவுரிமைஆணையம் நடத்தும் "கருத்தரங்கில்", மனித உரிமை பணியில் நெருக்கடியும், அச்சுறுத்தலும் என்ற தலைப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

"மனித உரிமை ஆணையத்தின்" தலைவர் திரு ஹென்றிதிபேன் அவர்கள் தலைமையில் மனித உரிமை போராளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், நெல்லை மாவட்ட செயலாளர் தி.மு. இராசேந்திரன் உள்ளிட்ட கழக முன்னணியினர் திரளாக பங்கேற்று சிறப்பாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தை தேனி மாவட்டத்தில் அமைக்க அனுமதி தராதீர்! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டபோது, இந்திய அணுசக்திக் கழகமும் முழு வீச்சில் இறங்கி, இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. முதலில் நீலகிரி மாவட்டம் சிங்காராவில் அமைப்பதாக இருந்தது. ஆனால் 2009 இல், இந்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், வன சரணாலயம் அமைந்திருப்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தது. நியூட்ரினோவை ஆய்வு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் ஒரு கிலோ மீட்டர் மலைப்பகுதி தேவை என்பதால், தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை மத்திய அரசு தேர்வு செய்தது.

இதன்படி மலை உச்சியில் இருந்து 1500 அடி ஆழத்திலும், 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு, ஐந்தாயிரம் டன் எடையுள்ள உலகத்திலேயே மிகப் பெரிய காந்தமய உணர்வு (ICAL) கருவியை நிறுவி, மின்தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடு ஒன்று இடைவெளியில் வைக்கப்படும். இந்த ஆய்வுக் கருவியை நிறுவ 1000 டன் எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 11 இலட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளைப் பெயர்த்து குகை அமைக்கும் திட்டமாகும். பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும்போது இம்மலையில் உள்ள நீர் அடுக்கு பகுதிகள் நிலைகுலைந்து, நீரியல் நிலநடுக்கம் நிகழும் ஆபத்துக்கும் வாய்ப்பு உள்ளது.

காந்தத்தின் செயல்பாடுகளையும், மின்தட்டு அறைகளின் செயல்பாடுகளையும் தூண்டுதல் செய்து, அதற்கிடையே நியூட்ரினோ துகளை ஆய்வு செய்வார்கள்.

காஸ்மிக் கதிர்களைத் தடுக்கும் அரணாக 1500 மீட்டர் நீளமுள்ள மலைப்பகுதி செயல்படும். 2.1 கிலோ மீட்டர் தூரம் 7 மீட்டர் அகலத்தில் சுரங்கம் அமைக்கப்படும்.

இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோ தனித்து வருவதில்லை. இதைவிட பல கோடி மடங்கு அளவில் பொழியும் காஸ்மிக் கதிர்கள் ஊடேதான் சேர்ந்து வருகிறது. இதனை தனியே வடிகட்டி பிரித்தெடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கு இமயமலை தொடங்கி, வடநாட்டின் பல பகுதிகளை ஆய்வு செய்தபோது, அங்கெல்லாம் எதிர்ப்புக் கிளம்பியதால், இளித்தவாயர்கள் தமிழர்கள் என்று கருதி பொட்டிப்புரத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

இத்தாலி நாட்டு அறிவியலாளர்கள் பலரும், உழவர்களும், பொதுமக்களும் எதிர்த்ததன் விளைவாக 2011 ஆம் ஆண்டில் கிரான் காசோ நியூட்ரினோ ஆய்வகம் மூடப்பட்டது. ஆயினும் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அறிவியலாளர்கள் பலர் இந்த ஆய்வகத்தை மூட வலியுறுத்தி தொடுத்த வழக்கு இத்தாலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நியூட்ரினோ ஆய்வில் வெளிப்படும் வெப்பத்தைத் தணிக்க பெருமளவு தண்ணீர் தேவைப்படும். இதற்காக பொட்டிப்புரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் குழாய் பதித்து, சுருளி ஆற்றிலிருந்து நாள்தோறும் ஏறத்தாள 16 இலட்சம் லிட்டர் தண்ணீர் (1.574D) இடைவிடாது எடுத்து வர இருக்கிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் இன்றியும், வேளாண்மைச் சாகுபடிக்கு நீரின்றியும் பாதிக்கப்படும் அவலம் ஏற்படும்.

இந்த ஆய்வகத்தில் முதல் பத்தாண்டுகள் நிகழ உள்ள முதல்கட்ட ஆய்வுப்பணிதான் விண்வெளியில் இருந்து வரும் நியூட்ரினோ துகள் பற்றிய ஆய்வாகும். இதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட உள்ள இரண்டாம் கட்ட ஆய்வு மிக மிக ஆபத்தான பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் நியூட்ரினோ தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகள் பொட்டிப்புரம் ஆய்வகத்திற்கு அனுப்பி நடைபெற உள்ள ஆய்வே மிக ஆபத்தான அடுத்தகட்ட ஆய்வாகும்.

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, பொட்டிப்புரத்தில் இந்த ஆய்வகம் நிறுவ 2015 ஜனவரி 5 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இந்த ஆய்வகத்தை நிர்வகிக்கும் பொறுப்புள்ள டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்த நிலை தகடுகள் உணர்வு நிலை- தற்போது முன்மொழியப்பட்ட ஆய்வு மட்டுமின்றி, உலகின் வேறு பகுதிகளில் நடக்கும் நியூட்ரினோ ஆய்வுகளோடு இணைந்து வேறு ஆய்வுகளையும் ஆய்வு செய்யும் என்று அறிவித்தது.

ஜப்பானின் டோக்கியோ நியூட்ரினோ ஆய்வகம், தேனியில் இருந்து 6900 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெனிவாவில் உள்ள் நியூட்ரினோ ஆய்வகம் 7200 கிலோ மீட்டர் தொலைவிலும், அமெரிக்காவின் பெர்மிலேப் நியூட்ரினோ ஆய்வகம் வான்வெளியில் 8600 கிலோ மீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் நேர்கோடு வரைந்தால் 7400 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன.

நியூட்ரினோ ஆய்வுலகில் அனைவராலும் மேற்கோள் காட்டப்படும் தலைசிறந்த அறிவியலாளரான ஜெ.ஜெ.பெலக்கா தந்த ஒரு அறிக்கையில், “ஆய்வகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மிகக் கடுமையான கதிரியக்கத் தாக்கம் இருக்கும்” என்கிறார்.

இந்தக் கதிரியக்கம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தீங்கு விளைவிக்கக்கூடியது. ஒரு வேளை சிறிய அளவு கசிவு ஏற்பட்டால் கூட கணித்திட முடியாத தீய தொடர் விளைவுகளை ஏற்படுத்திவிடும். 50 GEV ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளைப் பெற்று, ஆய்வு செய்யும் ஆய்வகத்தைச் சுற்றி குறைந்தது 340 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த உயிரின நடமாட்டமும் இருக்கக்கூடாது என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

பொட்டிப்புரம் ஆய்வகத்திலோ இதைவிட பன்மடங்கு ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகள் பெறப்பட உள்ளன.

திட்டமிடப்பட உள்ள பொட்டிப்புரம் ஆய்வகத்தைவிட 600 அடி ஆழம், அதாவது 2100 அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் இயங்கி வந்த (Exo200) என்ற செறிñட்டப்பட்ட செனான் (Xenon) ஆய்வகம் நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இருந்த போது, 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியைச் சுற்றி கடுமையான கதிரியக்கம் வெளிப்பட்டு, அந்த ஆய்வகம் மூடப்பட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது.

“நியூட்ரினோ கற்றைகளை எதிரி நாட்டு அணு ஆயுதங்களை அழிப்பதற்கான எதிர் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்” என முதன் முதலில் அறிவித்தவர் ஜப்பானிய அறிவியலாளரான ஹிரோடக்கா சுகவாரா என்பவர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் இவரும், இவரது ஆய்வுக் குழுவினரும் இணைந்து அளித்த ஆய்வு அறிக்கையில், “மிகை உயர் ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளை எதிரிநாட்டு அணுகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்தடி இல்லாமல் அனுப்பி உருக்கவோ, வெடிக்கவோ செய்ய முடியும்” எனக் கூறினர். நிலநடுக் கோட்டிற்கு ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்குக்கூட பூமிக்கு அடியில் நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி, யாருக்கும் தெரியாமல் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறினர். (Hirotaka Sugawara et al-destruction of nuclear boms using ultra high energy Neutrino Beam, June 2003)

அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஆல்பிரட் டோனி என்ற ஆய்வியலாளர், “அணு ஆயுதத்திற்கு எதிராக அதைவிட வலுவான ஆயுதமாக நியூட்ரினோ ஆயுதத்தை உருவாக்கிப் பயன்படுத்தலாம்” என அறிக்கை தந்தார். (Neutrino Counter Nuclear Weapon Alfred Tony, 26 June 2013)

உலகில் முதன் முதல் தோன்றிய மலை இமயமலை அல்ல, ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையும் அல்ல, விந்திய மலையும் அல்ல, மேற்கு தொடர்ச்சி மலைகள்தாம்! இந்த உண்மை ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டதால்தான் ஐ.நா.வின் யுனொஸ்கோ நிறுவனம், மேற்குத் தொடர்ச்சி மலைகளை உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவித்தது.

அப்படி அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு துரும்பைக்கூட அசைக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. அதற்கான ஜெனிவா ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்துப் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்துக்கு எதிராக எப்படி மலையை உடைக்கலாம்? என உயர்நீதிமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதில் கூற இயலவில்லை.

கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையும், காட்கில் கமிட்டி அறிக்கையும் இந்த அடிப்படையில் உலகில் புராதனமான மலை என தெரிவித்தன. ஆய்வகம் அமைக்கத் தேர்ந்தெடுத்த அம்பரப்பர் மலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநில எல்லை தொடங்குகிறது. 2.3 கிலோ மீட்டர் தொலைவில் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருக்கிறது. “ஒரு தேசியப் பூங்காவுக்கு பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எந்த உடைப்பையும் செய்ய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கின்றது.

அப்படி என்றால், ‘இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி’ என்று சொல்லப்படுகின்ற இந்தத் திட்டத்தில் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருக்கின்ற உண்மையை மறைத்துவிட்டார்கள். இது மிகப்பெரிய மோசடி. ஆகவே இங்கு ஆராய்ச்சி செய்ய முனைவது சட்ட விரோதம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், ஜெனிவா ஒப்பந்தத்துக்கும் எதிரானது.

இங்கே நிலநடுக்கம் அதிகம் இருக்காது. நில நடுக்கம் ஏற்படும் இரண்டாம் மண்டல அளவிற்குத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் அம்பரப்பர் மலை இருக்கின்ற இடம் மூன்றாம் மண்டலம் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடம் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் ஒவ்வொரு நாளும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 40 இலட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தப்போகிறார்கள். அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விவசாயத்தை அழிக்கும்.

இந்த நியூட்ரினோ ஆய்வு மய்யம் விஞ்ஞான உலகத்திற்கு தேவையான பல ஆராய்ச்சி முடிவுளைத் தரலாம். அதற்காக தமிழகம் பலிபீடம் ஆகவேண்டுமா? தேனி மாவட்ட மக்கள் பலி ஆடுகளா?

நாங்கள் வெளிநாடுகளுக்காகச் செய்யவில்லை என்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு விஞ்ஞானிகளை வைத்துக்கொண்டு செய்யப் போகின்றோம் என ஆவணங்களில் பதிவு செய்து இருக்கின்றார்கள்.

7500 கிலோ மீட்டரைத் தாண்டி நியூட்ரினோ கற்றைகள் வரும் என்கிறார்கள். எதிர்காலத்தில் அணுகுண்டுகள் வெடிக்க வைக்க முடியும். செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதோடு, அணுக் கழிவுகளை கொண்டு வந்து இங்கே கொட்டவும் போகிறோம் என்று எழுதியதை, தெரியாமல் எழுதி விட்டோம். இது எழுத்துப் பிழை என்று இப்போது சொல்வதை எப்படி ஏற்க முடியும்?

தென்பாண்டி மண்டலத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு வாழ்வளிக்கும் முல்லைப் பெரியாறு அணை, நியூட்ரினோ ஆய்வகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கேரளத்தின் இடுக்கி அணை 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வளையத்திற்குள் 12 தடுப்பு அணைகள் உள்ளன. இதன் காரணமாகத்தான் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்.

இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நான் வழக்குத் தொடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி இரண்டரை மணி நேரம் வாதங்களை முன் வைத்தேன்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி அரசர் தமிழ்வாணன், நீதி அரசர் இரவி அவர்கள் அமர்வு 2015 மார்ச் 26 ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், “நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதியைப் பெறும்வரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது” எனக் குறிப்பிட்டது.

எனது பிரதான மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டி அன்றைய கேரளா முதல்வர் உம்மன்சாண்டி அவர்களை 2015 பிப்ரவரி 7 ஆம் தேதி சந்தித்து விளக்கக் கடிதத்தைத் தந்தேன். பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் கேரளத்திற்குச் சென்று, கேரளா முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் அவர்களைச் சந்தித்தபோது, அவர் முழு அளவில் எதிர்ப்போம் என்றார்.

பிப்ரவரி 20 ஆம் தேதி பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதிக்குச் சென்றபோது, ஆங்காங்கே ஒவ்வொரு ஊரிலும் திரண்டிருந்த பொதுமக்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்று ஏமாற்றிவிட்டார்கள். இதன் ஆபத்தை உணர்வதால் உங்கள் போராட்டத்தில் பங்கேற்கிறோம் என்றார்கள்.

அதன்பின்னர், ‘நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க’த்தை நானும் தோழர்கள் லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, பொன்னையன், முகிலன், இளையரசு, சந்திரன் ஆகியோரைக் கொண்டு அமைத்து, சுற்றுச் சூழல் போராளியான மேதா பட்கர் அம்மையாரை அழைத்துவந்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம்.

பிற பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகத்தை தமிழ்நாட்டில் நிறுவ மோடி அரசு முனைந்துள்ளது. தேனி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள கேரளா மாநிலச் சுற்றுச் சூழலுக்கும், நீராதாரத்திற்கும் கேடு விளைவிப்பது மட்டுமின்றி, மிகக் கடுமையான கதிரியக்க ஆபத்தையும் விளைவிக்கக்கூடியதாகும். பொட்டிப்புரம் இந்தியா நியூட்ரினோ ஆய்வகத்தை இந்திய அரசு அமைக்க முயல்வது தமிழ்நாட்டுக்கும் கேடு செய்யும் நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை அனுமதி அளிக்காதது மனதிற்கு நிம்மதியைத் தந்தது.

ஆனால், தேனி மாவட்டத்திலிருந்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்கலாம் என்று சென்னையில் உள்ள அவ்வாரிய தலைமை நிர்வாகத்திற்கு கோப்பினை அனுப்பி உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது.

நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த முனையும் இந்திய அரசின் அதிகாரிகள் இதுபற்றிய விளம்பரத்திற்கும், பரப்புரை செய்வதற்கும் இதுவரை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார்கள். இத்திட்டத்தினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் அபாயத்தின் உண்மையை மறைத்து, அதிகாரிகள் அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையையும், தேனி மாவட்டத்தையும் பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தரக்கூடாது என்று நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக தமிழக மக்கள் நலனைக் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி


Friday, June 3, 2016

சோரம் போனவர்களை புறந்தள்ளிவிட்டு புத்துணர்வு பெற்ற தென் சென்னை!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மதிமுக தென் சென்னை மாவட்ட கழக செயலாளராக இருந்தவர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார். ஆனால் எந்தவித பாதிப்பிற்கும், கட்சி பணி தொய்விற்கும் உள்ளாகாமல் இருந்தது. எனவே மேலும், கழக செயற்ப்பாட்டை துரிதப்படுத்தும் வகையில், கழக பொதுச் செயலாளரும், தமிழின முதல்வருமான வைகோ அவர்களை தென் சென்னை மவட்டத்தை தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு என பிரித்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக,கழக மாநில தேர்தல் பணிகுழு செயாளராக பணியாற்றிய கழக குமார் அவர்களையும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வழக்கறிஞர் சுப்பிரமணி அவர்களையும், நியமித்திருக்கிறார்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கழக செயலாளர்கள் தங்கள் பணிகளை செவ்வையாக நிறைவேற்றி வெற்றி கனிகளை குவிக்கும் விதமாக செயலாற்ற ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கழக கண்மணிகளும், புதிய பொறுப்பாளர்களுக்கு, ஒத்துளைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறொம்.

ஓமன் மதிமுக இணையதள அணி