ராஜீவ் கொலைவழக்கில் தவறாக சேர்கப்பட்டு 25 ஆண்டுகளாக மதுரை சிறையில், இப்போது உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் அவர்களை காண சென்றார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர்கள், அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் கருணை அடிப்படையில் தமிழக அரசு உடனே விடுதலை செய்யவேண்டும் என மதுரை மத்திய சிறை வாயிலில் பேட்டியளித்தார்.
அப்போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் தி.மு.இராசேந்திரன், மதுரை மாவட்ட செயலாளர் பொடா பூமிநாதன் மற்றும் கழக வழக்கறிஞர்கள் புடைசூழ அங்கு இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment