MLF வெளியீட்டு அணித் துணைச் செயலாளர் ஜார்ஜ் அவர்களின் இல்லத் திருமண வரவேற்புவிழா இன்று 22-06-2016 சென்னையில் நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது பேசிய வைகோ அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும். மதிமுகம் தொலைக்காட்சி கழக கண்மணிகளால் மட்டுமே தொடங்கப்படுகிறது. அனைத்து வகையான செய்திகளும் இருக்கும். நமது செய்திகளையும் இருட்டடிப்பு இல்லாமல் ஒளிபரப்புவார்கள். மேலும் எனது அரசியல் சாரா உரையையும் சனி கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்புவார்கள். அப்போது பம்பரம் டிவியையும் நினைவுகூர்ந்தார்.
கழக நிர்வாகிகள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.
இறுதியாக நன்றியுரை ஆற்றிய MLF ஜார்ஜ் அவர்கள், எங்களுக்கென்று எந்த அடையாளமும் இல்லை. எல்லாம் உங்களால்தான், உங்களோடு பயணிப்பதை பெருமையாக நினைக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.
No comments:
Post a Comment