நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்தைப் பெற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 10680 தொழிலாளர்கள் வாக்களித்தனர்.
இதில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF), தொழிலாளர் விடுதலை முன்னணி (LLF), எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் ஆதரவு பெற்ற சிஐடியூ சங்கம் 4828 வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக வெற்றி பெற்றுள்ளது.
ஐம்பது ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய திமுக தொழிற்சங்கம் தொமுச 2426 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்துக்கும், அதிமுக தொழிற்சங்கமான அதொஊச 2035 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டு விட்டன.
கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி CITU இந்த வெற்றியை ஈட்டி உள்ளது. நெய்வேலி சிஐடியூ சங்கத்தின் தலைவராக மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ்நாடு செயலாளர் தோழர் ஜி.ஆர் அவர்கள் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment