கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிறந்த ஜேப்பியார் அவர்கள் காவல்துறையில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் உரியவராக அண்ணா தி.மு.க.வில் திகழ்ந்தார்.
மேலவையில் ஆளும் கட்சியின் கொரடாவாகவும், சென்னை மாநகரில் சோதனையான காலகட்டத்தில் குடிநீர் வழங்கும் பொறுப்பில் திறமையாகப் பணியாற்றினார். மக்கள் திலகம் மறைவுக்கு பின்னர் அரசியலை விட்டு விலகினார்.
ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கி அதனை நிகர் நிலை பல்கலைக்கழகமாகவே உருவாக்கினார். அவரது விடா முயற்சியால் கல்வியில் பட்டங்கள் பெற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பழகுவதற்கும், நட்புக்கும் மிக மிக இனிமையானவர். உடல் நலக் குறைவால் அவர் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment