மதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு பின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து கழகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். செவ்வாய்பேட்டையில் இன்று 23.06.2016 நடந்த இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்பாற்றினார்.
இந்த கூட்டத்தை திருவள்ளூர் மாவட்ட கழக அவைத்தலைவர் பூவை பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கூடப்பாக்கம் மேட்டுகண்டிகை திமுக கிளைச் செயலாளர் தனசேகரன் திமுகவிலிருந்து மக்கள் தலைவர் வைகோ அவர்களின் முன்னிலையில் தன்னை மதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
மேலும் ஆவடியை சேர்ந்த மாணவர்களும் தங்களை வைகோ தலைமையில் மதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment