44 ஆண்டுகளுக்கு முன் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் வைகோ-ரேணுகாதேவி தம்பதியரின் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்பாறினார். அந்த தம்பதியர்தான் இன்றளவும் நாடறிய நல் வாழ்க்கை நடத்தும் தம்பதியர் என்ற பெயருக்கு சொந்தகாரர்கள். கணவனின் பொது வாழ்விற்கு சற்றும் எதிர்மறை இல்லாமல், எதிர்பார்ப்பிற்கு மேலாக ஊக்கமும் ஆதரமும் அளிப்பவர்தான் திருமதி வைகோ அவர்கள்.
தலைவர் வைகோ அவர்களும் பொது வாழ்வில் கடந்த 52 ஆண்டுகளாக ஈடுபட்டு நாடறியும் தலைவர்களில் ஒருவராய், குடும்பத்தை செவ்வனே வழி நடத்தி, கழக கண்மணிகளுக்கு முன்மாதிரியார் விளங்குகிறார்.
உலக மூலையில் இருந்தெல்லாம் வாழ்த்துக்கள் குவிந்திருக்கும். ஓமன் மதிமுக இணையதள அணியினரும் திருமதி&திரு வைகோ தம்பதியினருக்கு நெஞ்சார்ந்த திருமண நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தலைவருக்கு திருமண நாளென்றால், அவரது தொண்டருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னால் புலவர் செவந்தியப்பன் தலைமையில் திருமணம் நடந்தேறியுள்ளது. அந்த வைகோயிஸ்ட் தான் சிங்கப்பூர் மறுமலர்ச்சி பேரவையின் முக்கியமான தூண் துவார் சுப்பையா அவர்கள். அவர்களுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த திருமண நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஜூன் 14 ஆம் தேதியின் சிறப்பு என்னவென்றால் புரட்சியாளன் சே குவேரா பிறந்த தினமும் இன்றுதான்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment