தென் சென்னை கிழக்கு மாவட்ட மதிமுக
செயல்வீரர்கள் கூட்டம் இன்று 25-06-2016 காலை ஹேமா மஹாலில் நடந்தது.
செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த
பொதுச் செயலாளர் வைகோ அவர்களை பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கையில், மதிமுக தொண்டர்களால் உருவான இயக்கம். ஒரு சிலர் சுயநலத்துக்காக வெளியேறுவதை பெரிதுபடுத்தி செய்தியாக்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் நடத்திய பொது வாக்கெடுப்பு, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு பொது வாக்கெடுப்பு ஒன்றே தீர்வு என்ற கருத்துக்கு வலு சேர்த்துள்ளது. நிச்சயமாக ஒருநாள் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படும். தமிழ் ஈழம் அமையும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
காலச்சக்கரம் ஒரேமாதிரி சுழல்வதில்லை.
NLC தொழிற்சங்கத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆதரவு பெற்ற
CITU பணத்தைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது என்றார்.
பின்னர்
நிகழ்ச்சியில் பேசிய வைகோ அவர்கள், ரொம்பப் புகழாதிங்க என்பதற்குத்தான் கூட்டத்தில் அதிகம் கைதட்டல் வருகிறது. இனி அதில் கவனமாக இருப்பேன். ஒருவரை ஊக்கப்படுத்துவதற்காகவே பாராட்டுகிறேன்
என்றார்.
தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் நாம் ஷேல் கேஸ் வழக்கில் கோர்ட்டில் நிற்கிறோம்.
காசு வாங்கிக் கொண்டு அல்ல. தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்காக என்றார்.
கண்ணீர் விடுவதால் ஒருவன் கோழை அல்ல. மனிதநேயம் உள்ளவர்கள் கண்ணீர் விடுவது இயற்கை.
ஒரே ஒரு வெற்றி கிடைத்துவிட்டால் போதும். அலை அலையாய் வந்து நம் கட்சியில் சேருவார்கள். போகிறவர்கள் சீர்வரிசையோடு போகட்டுமே என்றுதான் கட்சியை விட்டு நீக்காமல் இருந்தேன். ஆனால் தோழர்கள் போக நினைப்பவர்களை நீக்கிவிடலாம் என்று கருத்துக் கூறுகிறார்கள். எனவே தோழர்கள் கருத்துக்கு மதிப்பளித்து இன்றைக்கு ஒருவரை நீக்கி இருக்கிறேன். ஆனாலும் மாவட்டச் செயலாளர் இணைந்தார் என்றுதான் செய்தி போடுவார்கள்
என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஜெகன்.தனசேகரனை
பற்றி சொன்னார்.
நான் கொடிகட்டி, போஸ்ட்டர் ஒட்டி அடி மட்டத்தில் இருந்து அரசிலுக்கு வந்தவன். மதிமுகம் தொலைக்காட்சி நம் தம்பிமார்கள் நடத்துகிறார்கள். கட்சித் தொலைக்காட்சி அல்ல.
நமக்கென்று ஒரு தொலைக்காட்சி இல்லையே என்ற ஏக்கம் எனக்கே உள்ளபோது கட்சித் தொண்டர்களுக்கு இருக்காதா?
நான் கட்சிக்காரர்களை மனதார அண்ணன் தம்பிகளாகவும், எனது பிள்ளைகளாகவும் நினைக்கிறேன். நிகழ்ச்சிக்கு
பின்னர் கழகத்தின் கண்மணிகளோடு உணவருந்தினார் வைகோ
அவர்கள்.
அந்த
நிகழ்வில் பேசிய மதிமுகம் தொலைக்காட்சியின் இயக்குனரும், சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதி செயலாளருமான தாயகம் தங்கதுரை அவர்கள், தலைவருக்கு செருப்பாகவும் இருக்க வேண்டாம், தொப்பியாகவும் இருக்க வேண்டாம். கழகத்திற்கு நல்ல தொண்டனாக இருங்கள். அது போதும் என்றார்.
தென் சென்னை கிழக்கு மாவட்ட கழக
பொறுப்பாளர் கழக குமார் பேசும்போது, யாரைப் பற்றியும் நான் எப்போதும் தலைவரிடம் குறை சொல்ல மாட்டேன். அப்படித்தான் தலைவர் என்னை வளர்த்திருக்கிறார். என்னை ஆளாக்கியது இந்தக் கழகம்தான் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், திருமணம் முடித்து நான் எனது மனைவியோடு முதலில் சென்ற இடம் வேலூர் சிறைச்சாலை. பொடாவில் கைது செய்யப்பட்டதால் எனது திருமணத்தை அண்ணன் அவர்களால் நடத்தி வைக்க இயலவில்லை. அவரை சந்திக்க முதல் ஆளாக மனுப்போட்டு சந்தித்தேன். சாதி மதப் பாகுபாடு இன்றி நான் செயல்படுவேன்
என உணர்ச்சி உரையாற்றினார்.
கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ்
பேசுகையில், தோல்விகளைக் கண்டு துவளமாட்டோம். பகுதிச் செயலாளர்களுக்கு ஒரு செய்தியை
சொல்கிறேன். உங்கள் மாவட்டச் செயலாளர் கழககுமார் டார்கெட் வைத்து உங்களை டார்ச்சர் செய்ய மாட்டார். நீங்கள் செய்ததை தான் செய்ததாகச் சொல்லிக்கொள்ளாமல் தலைவரிடம் உங்களை அடையாளம் காட்டுவார் என
தொண்டர்களுக்கு ஊக்கமளித்தார்.
திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் அண்ணன் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்கள்
பேசுகையில், வேளச்சேரி சாலை பல ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. வேலைக்குப் பணம் வாங்கி அதை வாக்காளர்களுக்குத் தருகிறார்கள்
என தமிழக அரசை குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து
பேசிய கவிஞர் மணி வேந்தன் அவர்கள், ஆப்பிரகாம் லிங்கன் தொடர் தோல்விக்குப் பின்னர் வெற்றி பெற்றதைப்போல நாமும் வெல்வோம். சென்றவர்களைப் பற்றிப் பேசி அவர்களுக்கு விளம்பரம் தரவேண்டாம். தமிழ்நாட்டுப் பிரச்சினைகளில் அதிமுகவும், திமுகவும் சாதிக்காததை மதிமுக சாதித்துள்ளது. பத்திரிகையாளர்கள் மனசாட்சியோடு செய்திகளை வெளியிடுங்கள். தமிழ்நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் நேர்மையாக செய்திகளை வெளியிடுங்கள். அறிவாலயத்திற்கும் போயஸ் தோட்டத்துக்கும் சிம்ம சொப்பனம், தமிழ்நாட்டுப் பிரபாகரன் வைகோ
என்று சூளுரைத்தார்.
வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சு.ஜீவன்
பேசுகையில், ஆளும்கட்சியும் மகிழ்ச்சியாக இல்லை. எதிர்க்கட்சியும் மகிழ்ச்சியாக இல்லை. நாம்தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
தலைவருக்கு ஒரு வேண்டுகோள்,
தகுதிக்கு மீறி யாரையும் புகழாதீர்கள். அந்தப் புகழ்ச்சிதான் அவர்களின் மூலதனம். நாங்கள் நடக்கின்றோம். கால்களால் அல்ல. உங்களால். இறந்தவர்களைப் பற்றி யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அதைப்போல சென்றவர்களைப் பற்றி நான் விமர்சிப்பதில்லை.
பழி வாங்கும் உணர்ச்சி கூடாது என்று எனக்குப் புரிய வைத்தவர் அண்ணன் வைகோ அவர்கள். மனிதனை மனிதனாக வாழ வைப்பதில் தந்தை பெரியாருக்கு அடுத்து தலைவர் வைகோ அவர்கள்தான்.
தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் அவர்கள்
பேசுகையில், தென்சென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் எப்போதும் ஒன்றாக இருந்து கழகப் பணி ஆற்றுவோம் என்று
மகிழ்ச்சியூட்டினார்.
ஓமன்
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment