Thursday, April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போராட்டம்!

இந்திய ஒன்றியம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அனைத்து கட்சிகளின் சார்பில் திமுக தோழமை கட்சிகள் கலந்துகொண்டன.

மதிமுக சார்பில் துணைப் பொது செயலாளர் திரு.மல்லை சத்யா அவர்கள் கலந்துகொண்டார்கள். இன்றைய காவிரி மேலாண்மைக்கு வாரியம் குறித்தான எதிர்க்கட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில், முக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருடன் போராடி, பினர் கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

உடன் கழக தோழர்களும் உள்ளனர்...

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

நியூட்ரினோ போராளி தியாகி இரவி இல்லத்தில் வைகோ!

நியூட்ரினோ நாசகார திட்டத்தை எதிர்த்து மார்ச் 31 ஆம் தேதி நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயண தொடக்கவிழாவில், மதிமுக விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகாசி இரவி நியூட்ரினோவை விரட்டி தமிழகத்தை காப்பாற்ற தன்னை கொடையளிக்க உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் காண வரும் முன்பு மற்ற மதிமுகவினர் தீயை அணைத்துவிட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை நோக்கி சென்றனர். 

உடனே வைகோ அவர்கள் மதுரை அப்பல்லோ மருத்துவமனை டீன் அவர்களிடம் என் தம்பி தன்னுடலில் நியூட்ரினொவை எதிர்த்து தீவைத்துவிட்டான். அவனை ஆம்புலன்சில் தோழர்கள் கொண்டுவருகிறார்கள். உயர்தர ஏற்பாடுகள் செய்து சிகிச்சை கொடுங்கள் என்று அலைபேசி மூலமாக கேட்டுக்கொண்டார்.

தொடர் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டாலும் 90 சதவிகிதம் உடல் எரிந்து போனதால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 2 ஆம் நாள் அதிகாலை மரணமடைந்தார். 

இதையறிந்த மதிமுகவினர் கண்ணீர் கடலில் ஆழ்ந்தனர். பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இரவியின் உடலை எடுத்து சென்று அந்த வாகனத்திலே அமர்ந்து பின்னர் உடல் தகனம் செய்து நடைபயணத்தை தொடர்ந்தார்.

இன்று 05-04-2018 முழு அடைப்பு போராட்டம் இருந்ததால் நடைபயணத்தை ரத்து செய்துவிட்டு மதிமுகவினர் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, வைகோ அவர்கள் இரவி அவர்கள் இல்லத்திற்கு தனது துணைவியார் ரேணுகாதேவி அம்மையாருடன் சென்று சிவகாசி இரவியின் மனைவி, பிள்ளைகள், தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, April 4, 2018

5 வது நாள் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம்!

5 வது நாள் பயணமாக இன்று 04-04-2018 நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் தொடர்ந்தது. இன்றைய பொதுக்கூட்டமானது மாவட்ட செயலாளர் சந்திரன் ஏற்ப்பாட்டில் போடிநாயக்கனூர் பகுதியில் சிறப்பாக நடந்தது.

இன்றைய நடைபயணத்தில், தலைவர் வைகோ அவர்களின் தாயார் பெயர் மற்றும் உருவம் கொண்ட முதிர்தாய் மலர்கொடுத்து வாழ்த்தினார். அவர் பெயரும் மாரியம்மாள் தான். உடனே தலைவர் அவர்கள், உங்கள் வாழ்த்தை என் அம்மாவே வந்து வாழ்த்துவதாக எண்ணிக் கொள்கிறேன் என நெகிழ்ச்சியுற்றார்.

நடைபயண வழி நெடுகிலும் மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். மதிமுகவினர் விழுப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே நடந்தார்கள்.

ஒமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, April 3, 2018

4ஆம் நாள் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம்!

நியூட்ரினோ நாசகார திட்டத்தை எதிர்த்து நடைபயணம் மேற்க்கொள்ளும் மதிமுகவினர் இன்று 03-04-2018 4ஆம் நாளாக ஆண்டிப்பட்டியிலிருந்து நடைபயணத்தை தொடங்கினார்கள்.

இன்றைய நடைபயணத்தில் மனித உரிமை காவலர் ஹென்றி திபேன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களுடன் கலந்துகொண்டு நடந்தார்.

மேலும் தலைவர் வைகோ அவர்கள் நடந்து வந்துகொண்டிருந்த போது மாணவர்கள் சந்தித்து நடைபயணத்தை வாழ்த்தும் வகையில் நாங்களும் இந்த நடைபயண எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்று சொல்லி வைகோ அவர்களுடன் நடந்து சிறுது தூரம் சென்றார்கள்.


மேலும் தேனியில் இறுதி பொதுக்கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களும் கலந்துகொண்டு நடைபயணத்தை வாழ்த்தியும் விளக்கியும் பேசினார்கள்.

நடைபயணங்களுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளை அனைத்து கட்சிகள் நடத்தும் வேலை நிறுத்ததிற்கு திரு.வெள்ளையன் மற்றும் திரு. விக்கிரமராஜா தலைமையிலான வணிக சங்கங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

மேலும் ஐந்தாம் தேதி நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு தரும் வகையில், அன்று நடைபெறும் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் நடைபெறாது எனவும் முழு அடைப்பில் பங்கேற்குமாறும் தெரிவித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் வைகோ மலரஞ்சலி!

இன்று (03.04.2018) காலையில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் தலைவர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

காவிரி மேலாண்மை வாரியம்-வைகோ விளக்கம்!

இவ்வாண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் - தி.மு.கழக செயல் தலைவரின் வேண்டுகோலின்படி தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிஅரசர்கள் அமித்வராய், கன்வில்கர் ஆகிய மூவர் அமர்வு வழங்கிய 465 பக்க தீர்ப்பை நான் வரிவிடாமல் படித்ததனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியினுடைய அமர்வு தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.

காவிரி நடுவர் மன்றத்தினுடைய இறுதித் தீர்ப்பில் பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியத்தைப் போல, காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) அமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துவிட்டது.

இப்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை மேலாண்மை வாரியம்தான் செயல்படுத்தும். புதிய அணைகளை கர்நாடகம் கட்ட முடியாது. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு முறையாக வழங்கப்படும். அணைகளின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படையே மேற்கொள்ளும். மத்திய அரசு இதனைப் புரிந்துகொண்டதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று எழுத்து மூலம் கோரிக்கை மனு தந்தார்.

தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து, தமிழக காவிரி டெல்டா விவசாயிகளை நிரந்தரமாக நிர்மூலம் செய்யும் குறிக்கோளோடு நரேந்திர மோடியின் யோசனையின்படி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8 தேதிகளில் மத்திய அமைச்சராக உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார் இல்லத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர்.

கர்நாடக அரசு மேகதாட்டு, ராசிமணலில் அணைகள் கட்டிக்கொள்ளலாம் என்றும், வெளிப்படையாக மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி கொடுக்காது என்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அக்கூட்டத்தில் உறுதி அளித்தார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை நிரந்தரமாக அழிக்கும் படுபாதகத்தை மத்திய அரசு செய்யப் போகிறது என்பதைத் தெரிந்துகொண்ட நான் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கட்சிக் கொடி கட்டாமல் பல நாட்கள் மேகதாட்டு, ராசி மணலில் அணைகளைக் கட்டவிடாமல் தடுப்பதற்கும், மீத்தேன் போன்ற நாசகாரத் திட்டங்களைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன்.

பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வாசித்துக் காட்டினேன். அதில் “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே இல்லை. ஸ்கீம் - திட்டம் என்றுதான் இருக்கிறது. அப்படி அமையும் திட்டத்தையும் நாடாளுமன்றம் விருப்பம்போல மாற்றிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.”

நான் அன்று சொன்னதை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றைக்கு வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஸ்கீம் - என்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பொருள் அல்ல என்று கூறினார். எனவே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதுதான் நரேந்திர மோடியின் திட்டம். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தீர்ப்பு அந்த எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.

நிலைமை இப்படி இருக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும் வகையில் அண்ணா திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் என்ற சதி நாடகத்தை மோடியின் விருப்பப்படி நடத்தினார்கள். இன்றைய மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஒருபோதும் அமைக்காது என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

என்னை ஒரு பொருட்டாக மதித்துத் தொடர்ந்து செய்திகள் வெளியிடுகின்ற நான் நேசிக்கின்ற ஓரிரு பத்திரிகைகளில்கூட காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற செய்தி நிருபர்கள் கொடுத்த தவறான தகவலால் பிரசுரம் ஆகியுள்ளது.

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை, தமிழகம் காக்கும் போராட்டமாகக் கருதி அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பேருந்து ஓட்டுநர்களும், வணிகப் பெருமக்களும், தொடர்வண்டி ஓட்டுநர்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டு நலனிலும், ஈழத்தமிழர் நலனிலும் அர்ப்பணிப்போடு செயல்படுகிற தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் அண்ணன் வெள்ளையன் அவர்களையும், அதுபோல் சகோதரர் விக்ரமராஜா அவர்களையும் 5 ஆம் தேதி முழு அடைப்பில் பங்கேற்று தமிழகத்தைக் காக்கும் கடமையில் ஈடுபட வேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கிற தோழர்கள் ஆத்திர உணர்ச்சிக்கும், வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் தமிழக வரலாறு கண்டிராத அறப்போராட்டமாக நடத்திக் காட்ட பணிவுடன் வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் இன்று 03-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தீக்குளித்து உயிர் நீத்த சிவகாசி ரவியின் மனைவி அறிக்கை!

விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகாசி அ.ரவி அவர்கள் நியூட்ரினோவை எதிர்த்து மதுரையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்ததை கொச்சைப்படுத்தும் வகையில் அரசு உதவி கேட்டதாக என் கணவரின் தம்பி முருகன் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியை சிவகாசி அ.ரவி அவர்களின் மனைவி ர.முத்துலட்சுமி ஆகிய நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும், தலைவர் வைகோ அவர்களின் நடைப்பயணத் தொடக்க நிகழ்ச்சியில் என் கணவர் தீக்குளித்து தன் நோக்கத்தை மரண வாக்குமூலமாக நீதிபதியிடமும் கொடுத்தார்.

என் கணவரின் உயிர்த் தியாகத்தை எண்ணி எங்கள் தலைவர் வைகோ அவர்கள் எங்கள் குடுமபத்தைக் காப்பாற்றுவார். அரசின் உதவி எதுவும் தேவை இல்லை என தெரிவிக்கிறேன் என்று ரவியின் மனைவி ர.முத்துலட்சுமி அறிக்கை தந்துள்ளார் என 

மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழகம் இன்று 03.04.2018 செய்தி வெளியிட்டுள்ளது.