Saturday, April 7, 2018

அம்பரப்பர் மலை அடிவாரத்திலிருந்து தொடங்கிய 7 ஆம் நாள் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம்!

நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் அம்பரப்பர் மலையின் அடிவாரத்திலிருந்து 7 வது நாளாக இன்று 07-04-2018 காலையில் தொடங்கியது.

செல்லும் வழியில் தேவாரத்தில் உள்ள இமேஜ் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். மதிய உணவுக்கான அரிசி மளிகை சாமான் உட்பட அனைத்து பொருட்களும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

புதிதாக அவர்கள் பகுதியில் திறக்கவிருக்கும் டாஸ்மாக் கடையை தடுக்க சொல்லி தலைவர் வைகோ அவர்களிடம் கிராமத்து பெண்கள் கோரிக்கை வைத்தார்கள். தலைவரும் இன்றே தேனி மாவட்டம் கலெக்ட்ரிடம் பேசுவதாக உறுதி தந்தார்கள்.

தமிழ்நாட்டு நலனுக்கு முதல் விரோதி தமிழக கவர்னர் என வைகோ குற்றஞ்சாட்டினார். பல்கலை கழகங்களுக்கு தமிழ்நாட்டில் பேராசிரியர்கள் இல்லையா?

குட் ஷெப்பர்ட் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் தலைவர் வைகோ அவர்களை அன்புடன் வரவேற்றார்கள்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கும் துணிவு உங்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம். உங்களை மட்டுமே நம்புகிறோம். என தலைவர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்ட ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெரியவர்கள். தலைவர் வைகோ அவர்களை வாழ்த்தி வரவேற்றார்கள்.

காலை நடைபயண உணவு இடைவேளையின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அதே நேரம் மீண்டும் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு திரு.முத்தரசன் அவர்களுக்கு தலைவர் வைகோவும் வாழ்த்து தெரிவித்தார்கள்கள்.

திரு.நல்லக்கண்ணு அவர்கள் வரும் 9ஆம் தேதி நடைபயணத்தில் கலந்து கொள்வதாக தலைவர் வைகோ அவர்கள் தெரிவித்தார்கள்.

மக்களின் உள்ளமே கோயில். அதில் ஒரு இடம் கிடைத்தால் அதைவிட பெரிய பாக்கியம் ஏதுமில்லை. நான் விஞ்ஞானி இல்லை. ஆனால், இந்த மண்ணை காக்கும் போராளி என தலைவர் வைகோ உரையாற்றினார்.

செய்திகள், படங்கள்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, April 6, 2018

6 ஆம் நாள் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம்!

நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் 6 வது நாளாக போடிநாயக்கனூரிலிருந்து புறப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்று இந்த திட்டத்தை அகற்ற வலியுறுத்தினார்கள். அப்போது எதிரில் வந்த துப்பரவு தொழிலாளர்கள் இந்த நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் போடிநாயக்கனூரிலிருந்து நரசிங்கபுரம் நுழையும் போது ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றார்கள் தாய்மார்கள். தலைவர் வைகோ அவர்களுக்கும், உடன் வரும் வீரர்களுக்கும் இளநீர், மோர் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

மாலையில் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் விளக்க பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. 

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

அனைத்துக்கட்சி கூட்டத்தில் மதிமுக அவைதலைவரும் பொருளாளரும்!

சென்னை அறிவாலயத்தில் இன்று 06-04-2018 நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்களும் கழக பொருளாளர் அ.கணேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டனர். 

உடன் வழக்கறிஞர் சைதை ப.சப்பிரமணி, கே.கழகுமார் கராத்தே பாபு சென்றிருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் நியமனம்-வைகோ கண்டனம்!

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் இராஜாராம் 2016 மே 26 ஆம் தேதி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் முக்கியத்துவம் பெற்ற இத்தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு கடந்த 23 மாதங்களாக துணைவேந்தராக எவரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இதனால் அண்ணா பல்கலைக் கழகப் பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் நிர்வாகப் பணிகள் முடங்கின.

ஆளும் கட்சியினர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அலட்சிப் போக்குடனேயே இருந்தனர்.

துணைவேந்தர் பணி நியமனங்களில் புரையோடிப்போன ஊழல், நாடறிந்த ரகசியம் ஆகும். 

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்றுமுறை தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகுந்த காலதாமதமாக தற்போது துணைவேந்தர் பொறுப்புக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.கே.சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த பேராசிரியர் பெருமக்கள் பலர் விண்ணப்பித்ததை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா அவர்களை அமர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

துணைவேந்தர் பதவிக்கு தகுதிமிக்க கல்வியாளர்களே தமிழகத்தில் இல்லை என்று ஆளுநர் புரோகித் கருதுகிறாரா?

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் பேராசிரியர் சூர்ய நாராயண சாஸ்திரியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்ததற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த நியமனத்தை ரத்து செய்துவிட்டு, தேர்வுக்குழு பரிந்துரைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் வலியுறுத்தினர்.

ஆனால் ஆளுநர் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஆந்திராவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் சூர்ய நாராயண சாஸ்திரியை நியமனம் செய்தார். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமித்து இருக்கிறார்.

இவற்றை நோக்கும் போது ஆளுநரின் அதிகார ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராகவே இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

அரசியல் சட்ட மரபுகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில், மாநில அரசின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, மோடி அரசின் முகவராக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் தொடர்ந்து ஆளுநர் செயல்படுவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் பச்சைத் துரோகத்திற்கு எதிராக தமிழகமே கொந்தளித்துப் போராட்டக் களத்தில் ஈடுபட்டு இருக்கிறது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து இருப்பதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழகத்தில் செயல்படும் பல்கலைக் கழகங்களுக்கு தமிழக கல்வியாளர்களையே துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 06-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை