Monday, October 10, 2022
முலாயம் சிங் யாதவ் மறைவு! தலைவர் வைகோ இரங்கல்!
Saturday, October 8, 2022
மிலாது நபி திருநாள். வைகோ வாழ்த்து!
என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையில் இருந்து துளி அளவும் மாற மாட்டேன் என உறுதியுடன் போராடியவர் நபிகள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபிகளின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி கண்டார்.
அத்தகைய மாமனிதரான நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.
இசுலாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
08.10.2022
Tuesday, October 4, 2022
சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்!
தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிய வழக்கு, புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையரிடம் நிலுவையில் உள்ளது.
பணியாளர்களின் பணி நிலையில் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படக்கூடாது என்று தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை மீறி அரசிடம் முன்னனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு நோட்டீ° எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி நிர்வாகம் வேலை நீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பணி நீக்கத்தைக் கண்டித்து, தொழிலாளர்கள் 3ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோதமான செயலாகும்.
பதிமூன்று ஆண்டு காலம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் அளிக்காமல், சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் 58 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
04.10.2022
Sunday, October 2, 2022
நல்லகண்ணு அவர்களிடம் நலம் விசாரித்தார் வைகோ!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, உயர்திரு நல்லகண்ணு அவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். நல்லகண்ணு அவர்கள் நலமாக உள்ளார்கள் என்று வைகோ தெரிவித்தார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
02.10.2022
Wednesday, September 28, 2022
அக்டோபர் 2 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மறுமலர்ச்சி தி.மு. கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை!
இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி மக்களை வர்ணாசிரம அடிப்படையில் பிளவுபடுத்தும் சங் பரிவார் சக்திகள் அண்மைக்காலமாக தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இப்படிப்பட்ட சூழலில் உத்தமர் காந்தியார் பிறந்த நாள் - பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் ஆகிய சிறப்பிற்குரிய அக்டோபர் 2, அன்று நடைபெற உள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மறுமலர்ச்சி தி.மு. கழகம் இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழகத் தோழர்களுடனும், நிர்வாகிகளுடனும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
28.09.2022
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வைகோ கடிதம்!
Sunday, September 25, 2022
அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சைக் கண்டித்து மறுமலர்ச்ச்சி தி.மு.க. ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்! வைகோ MP அழைப்பு!
அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 06.10.2022 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு என்னடைய தலைமையில் நடைபெற்ற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கழகத் தோழர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
25.09.2022
Saturday, September 24, 2022
இசுலாமிய அமைப்புக்களின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை! வைகோ MP கண்டனம்!
எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர்.
ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த அமைப்புக்கள் ஆரவாரமின்றி பணியாற்றிக்கொண்டு இருக்கின்றன.
இந்த அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக புழுதிவாறித் தூற்றும் பணியில் சங் பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்திக்கொண்டு வருகிறது.
இந்த அமைப்புக்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையும், நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானதாகவும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்தப் போக்கினை மறுமலர்ச்சி தி.மு.க. கண்டிக்கிறது. அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
24.09.2022
Friday, September 23, 2022
பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க! வைகோ MP கோரிக்கை!
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்து, கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏமாற்றி விட்டு விட்டு சென்று விட்டனர்
அதற்கு பின்னர் 10.06.2021அன்று இவர்களை கர்நாடக காவல்துறை கைது செய்து, மங்களூர் சிறையில் அடைத்தனர். வெளிநாட்டவர்கள் என்பதால் தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய புலனாய்வுப் பிரிவு இவர்களை விசாரணை செய்து, இவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஏமாற்றப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்யலாம் என்று 8.9.2021 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.
அதற்கு பின்னர் அவர்கள் பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் கொண்டு வந்து சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.
மீண்டும் இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவு 30.10.2021 அன்று மறு உத்தரவு பிரபித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது.
இதன்பின்னும் தங்களை விடுவிக்காததைக் கண்டித்து இவர்கள் அறவழியில் போராடியதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் திரு மஞ்சுநாத் அவர்கள் இவர்களில் 10 பேரை மட்டும் நீலமங்கலம் சிறப்பு முகாமுக்கு மாற்றம் செய்து உள்ளார்கள். அங்கேயும் சுகாதாரம் இல்லாமல் 10+10 அளவுள்ள சிறிய அறைக்குள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். மீதமுள்ள 28 பேரும் பரப்பன அக்ரகார சிறையிலேயே சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.
எனவே, பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ள தமிழர்களை ஒன்றிய அரசு உடனடியாக விடுதலை செய்து, இலங்கை தூதரகம் மூலம் அவர்கள் தாய் நாடு திரும்ப ஆவன செய்திட வேண்டுகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
23.09.2022
Wednesday, September 21, 2022
பேரதிர்ச்சி. அண்ணன் முராத் புகாரி மறைவுக்கு ஒமான் மதிமுக ஆழ்ந்த இரங்கல்!
தென் மாவட்ட கழக செயலாளர்கள் பிரிந்து சென்ற பிறகு எழுச்சியாக அடுத்த கூட்டம் தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மறுமலர்ச்சி திமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு! நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து!
ஒவ்வொரு ஆண்டும் இசுலாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார்.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தன்றும் நண்பகல் உணவைத் தயாரித்துக் கொண்டுவந்து தருவார்.
அழகான தோற்றம் கொண்டவர். மலர்ந்த முகத்தோடு, மாறாத புன்சிரிப்போடு அவர் உலவுகின்ற காட்சி என் கண்ணை விட்டும், நெஞ்சை விட்டும் அகலவில்லை.
நான் எத்தனையோ துக்கங்களைத் தாங்கி இருக்கிறேன். ஆனால் இது பேரிடி போல் என் தலையில் விழுந்துவிட்டது. எப்படி மறப்பேன் அந்த முகத்தை; அவர் பாசத்தை; அவர் காட்டிய எல்லையில்லாத அன்பை. இனி ஒருவரை அப்படிக் காண முடியாது நான்.
கழகத்தால் மூன்று நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும்.
ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும்.
யாரால் எனக்கு ஆறுதல் சொல்ல முடியும். நான் நொறுங்கிப் போய்விட்டேன். பொங்கி வரும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தோழர்கள் இந்த அறிவிப்பின்படி துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
21.09.2022
Tuesday, September 20, 2022
மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக 60 தமிழர்கள்; விரைந்து மீட்பு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ MP வலியுறுத்தல்!
தாய்லாந்து நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், ஒரு குற்றமும் செய்யாத நிலையில் இவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
அவர்களை மீட்டு, தாயகத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
20.09.2022
நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்! வைகோ கடும் கண்டனம்!
மாணவியின் மரணத்தில் புதைந்து உள்ள மர்மங்களை வெளிக் கொணர்வது பத்திரிக்கை, ஊடகங்களின் கடமை என்பதால் நக்கீரன் இதழும், ஊடகமும் இதில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வந்தனர். தனியார் பள்ளி மாணவி இறப்பின் பின்னணி குறித்து நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் ஆய்வு செய்து பல தகவல்களை மக்கள் முன் வைத்தார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சென்று மேலும் புலனாய்வில் ஈடுபட்ட நக்கீரன் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
அவர்கள் சென்ற மகிழுந்தை 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று தலைவாசல் அருகே தடுத்து நிறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்தியது, பள்ளி நிர்வாகம் ஏவிவிட்ட வன்முறைக் கும்பல் என தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியக் கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.
ஜனநாயக நாட்டில் பத்திரிக்கை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுவதையும், செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்
சென்னை - 8
20.09.2022
Saturday, September 17, 2022
சமுக நீதி நாள். தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு!
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாள் விழா இன்று 17.09.2022 காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் தாயகத்தில் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அமித்ஷாவின் ‘இந்தி வெறி’ பேச்சைக் கண்டித்து மறுமலர்ச்சி திமுக ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்! வைகோ MP அழைப்பு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்த நாள் முதல், ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே நாடு என்ற முழக்கத்துடன், மாநிலங்களுக்கு எதிரான போக்கினை நாள்தோறும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
இந்தி பேசாத மாநிலங்களின் மீது சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் மூர்க்கத்தனமாகத் திணித்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்திற்கு தலைமை வகித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றும்போது, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உரையாற்றினார்.
இந்திய அமைச்சரவையின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், வடகிழக்கு மாநிலங்களில் 22,000க்கும் அதிகமான இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அந்தக் கூட்டத்தில் ஆணவமாகப் பேசினார்.
நாடு முழுக்க கண்டனக் குரல் எழும்பியதும், நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று சமாளித்து, மழுப்பி பின்வாங்கிக் கொண்டார் அமித்ஷா!
இப்பொழுது மீண்டும் இந்தியைத் திணிக்கும் ஆர்வத்தோடு, இந்திய வரலாற்றின் ஆன்மாவை கற்றுக்கொள்ள அனைவரும் இந்திமொழியைக் கற்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
“அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான்” என்றும் அமித்ஷா இந்தி வார விழாவில் கொக்கரிக்கிறார்!
தொன்மைவாய்ந்த நம் தமிழ்மொழியையும், பிற மாநில மொழிகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி, உலகின் உயர்ந்த மொழி என்ற பொய்த் தோற்றத்தை அமித்ஷா புனைய முனைவது, இந்தி ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பாட்டிற்கும் நேர் எதிரானது ஆகும் இது!
சமஸ்கிருத வளர்ச்சிக்கும், இந்தி மொழி வளர்ச்சிக்கும் மலை அளவு நிதி ஒதுக்கி, தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் கடுகளவு நிதி ஒதுக்கும் பா.ஜ.க. அரசு, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இந்தி பேசாத மக்களிடம் புகுத்தும் பா.ஜ.க. அரசு, “ஒருமைப்பாடு” என்பதைக் காட்டி, இந்தியை நம்மீது மீண்டும் திணிக்கும் அபாய எச்சரிக்கையாகவே அமித்ஷாவின் பேச்சை நாம் கவனிக்க வேண்டும். இதனைக் கண்டித்து தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன்.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இந்தி எதிர்ப்புக் கனல் கொழுந்து விட்டு எரிகிறது. எதிர்ப்பு காரணமாக மைசூரு நகரில் இந்திநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்திநாள் கொண்டாட்டத்திற்கு எதிராக, விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது!
எனவேதான், அமித்ஷாவின் இந்திவெறிப் பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் அறப்போருக்கு அழைப்பு விடுக்கிறது.
24.9.2022 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அன்புடன் அழைக்கிறேன்!
பெரியாரும் - அண்ணாவும் அரும்பணியாற்றிய - திராவிட இயக்கம் வேரூன்றி நிற்கும் தமிழ் மண்ணில், தமிழ் மொழி உணர்வு பட்டுப்போகாமல் செழித்து நிற்கிறது; போராட்ட போர்க்குணம் ஆழித்தீயாய் என்றும் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை அகிலத்திற்கு பறைசாற்றிட, கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வாரீர்! வாரீர்!! என அழைக்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
17.09.2022
Friday, September 16, 2022
குவைத் நாட்டில் ஆர்.முத்துக்குமரன் படுகொலை! குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர் வைகோவிற்கு கடிதம்!
குவைத் நாட்டில் இறந்த ஆர்.முத்துக்குமரன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், இறப்பிற்கு உரிய நீதி விசாரணை செய்யவும் தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கை..!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆர்.முத்துக்குமரன் என்பவர் தனது பிழைப்புக்காக, 03.09.2022 அன்று, குவைத் நாட்டிற்கு சென்று உள்ளார். ஆர்.முத்துக்குமரன் அவர்களுக்கு விசா அனுப்பி வைத்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர் 07.09.2022 அன்று, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உள்ளார்.
இந்தத் தகவல் 09.09.2022 அன்று, பிற்பகல் 4 மணியளவில், அவரது மனைவி மு.வித்யா அவர்களுக்கு தெரிந்ததோடு, அந்தத் தகவல் உண்மை எனவும் உறுதி செய்யப்பட்டது.
ஆர்.முத்துக்குமரன் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறை ஆகும். எந்த முன்பகையும் இல்லாத சூழலில், தனது கணவரை கொலை செய்த நபருக்கு உரிய தண்டனை வாங்கித் தரவும், தனது குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும், தனது கணவரின் சடலத்தை தமிழகத்திற்கு கொண்டு வரவும் உதவிடுமாறு, திருமதி மு.வித்யா அவர்கள் 10.09.2022 அன்று தலைவர் வைகோ அவர்களுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதினார்.
தகவல் அறிந்த தலைவர் வைகோ அவர்கள் இது தொடர்பாக, 14.09.2022 இந்திய வெளியுறவுத்துறைக்கும், குவைத் தூதரக அதிகாரிகளுக்கும் நிலமையை விளக்கி அவசர மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார்.
தலைவர் வைகோ எம்.பி., அவர்களின் கோரிக்கையை ஏற்று, பதில் அளித்த குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்கள், இந்த வழக்கில் நியாயமான விசாரணையை மேற்கொள்ள குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளோம் எனவும், தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம் எனவும், இறந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், மறைந்த முத்துக்குமரன் அவர்களின் உடல் 15.09.2022 அன்று மதியம் 02.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்து அடையும் எனவும் தெரிவித்து இருந்தார்கள்.
தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சென்ற ஆர்.முத்துக்குமரன் அவர்களின் குடும்பத்திற்கு, உரிய நீதி கிடைக்கவும், இழப்பீடும் வழங்வும், அதற்கு உரிய விசாரணையை மேற்கொள்ளவும் தலைவர் வைகோ அவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதற் கட்ட விசாரணை துவங்கப்பட்டு உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
16.09.2022
அரசியல் வழி தமிழ், இலக்கியம், கலை பண்பாடு வளர்த்த மலேசிய ‘துன்’ சாமிவேலு மறைவு! வைகோ MP இரங்கல்!
மலேசிய இந்தியர் காங்கிரசின் எழுபத்தாறு ஆண்டு கால வரலற்றில், அறுபது ஆண்டுகள் அதனுடன் இணைந்து பயணித்தவர்; பணியாற்றியவர். முப்பது ஆண்டுகள் தலைமைத்துவம் வழங்கியவர் ‘துன்’ சாமிவேலு அவர்கள் ஆவார். 8.3.1936 இல் பிறந்த அவர் நேற்று 15.09.2022 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
கட்டடக் கலை அலுவலகத்தில் ஓடும்பிள்ளையாக, அலுவலகத் தம்பியாகப் பணியைத் தொடங்கிய சாமிவேலு அவர்கள், பின்னர் அதே துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.
1950 ஆம் ஆண்டுகளில் அகில மலாயா தமிழர் சங்கம் நடத்திய தமிழர் திருநாள் விழாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்
1974ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 1978ஆம் ஆண்டு துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் 1979ஆம் ஆண்டு அமைச்சரவையில் இடம் பெற்றார். அன்றிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை மலேசிய அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
ம.இ.கா. தலைமைத்துவத்தை ஏற்றிருந்தபோது இந்திய சமுதாயத்தை உருமாற்றம் செய்ய முயற்சிகள் பல மேற்கொண்டார்.
எம்.ஐ.இ.டி. என்ற கல்வி இயக்கத்தின்வழி பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாட்டதாரிகளாக்கினார்.
இந்தியர்களுக்காக உலகத்தரம் வாய்ந்த ஏய்ம்°ட் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.
மலேசிய அரசியல்வாதிகளுள் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்தவர் சாமிநாதன் அவர்கள்தான். அதற்கு ஈடான புகழைச் சுமந்தவரும் இவர்தான்.
மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பதவி வகித்த இந்தியர் என்கின்ற சிறப்பு இவருக்கு உண்டு. அதேவேளையில், மலேசிய இந்தியர் காங்கிர° எனும் இந்தியர்களின் அரசியல் கட்சியில் நீண்ட காலம் தலைவர் பதவியை வகித்தவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எந்தச் சூழலிலும் எந்தக் களத்தையும் சந்திக்க தயங்காதவர். அரசியல்வாதியாக இருந்தாலும் கலை, இலக்கியம், சமயம், பண்பாடு என எல்லா முன்னெடுப்புகளுக்கும் துணை நின்றவர்.
தமிழ் நூல் வெளியீடுகளுக்கு புதிய இலக்கணம் கண்டார். குறிப்பாக இலக்கியவாதிகளுக்கு நிழலாக இருந்தவர். புத்தக வெளியீடுகளில் கலந்துகொண்டு கணிசமான தொகையைக் கொடுத்து எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்தார். அதேவேளையில், தன் அரசியல் சகாக்களை நூல் வெளியீடுகளுக்கு உதவச் சொல்லி எழுத்தாளர்களுக்கு உதவியவர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மலேசியாவிற்கு சென்றபோது, அந்த ஏற்பாட்டுக் குழுவிலும், பின்னர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது அதன் ஏற்பாட்டுக் குழுவிலும் இருந்து பணியாற்றியவர்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும், ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்தியவர்.
மலேசியாவின் முதன்மையான விருதாக விளங்கும் ‘துன்’ விருதை சம்மந்தன் அவர்களுக்குப் பிறகு இரண்டாவதாகப் பெற்ற இந்திய வம்சாவளி தலைவர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.
அப்பேர்பட்ட ‘துன்’ சாமிவேலு அவர்களின் மறைவு மலேசியத் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருரும் அவரது குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
16.09.2022
Thursday, September 15, 2022
மதிமுக நடத்திய பேரறிஞர் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா!
சென்னை அண்ணா கலையரங்கில் மதிமுக நடத்திய பேரறிஞர் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு 2022 செப் 15 ஆம் நாள் நடைபெற்றது.
தென்சென்னை கிழக்கு மாவட்ட கழக ஏற்பாட்டில் நடந்த மாநாடு சிறப்பாக இருந்தது. மேலும் வடசென்னை கிழக்கு மாவட்டம், வடசென்னை மேற்கு மாவட்டம், தென்சென்னை மேற்கு மாவட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள் அயராத பணி பாராட்டத்தக்கது.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில் அரங்கினுள்ளும் வெளியிலும் கழக கண்மணிகளும், பொதுமக்களும் அமர்ந்திருந்து உரை கேட்டனர்.
Wednesday, September 14, 2022
குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில், நட்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டார்.
வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார்.
இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டு இருந்த வேளையில், கடந்த 7 ஆம் தேதி புதன் கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. முத்துக்குமரன் பணி செய்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாக தகவல் கிடைத்து, அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவரது குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவலைத் தெரிவித்து, முத்துக்குமரன் உடலை உடனே தாயகம் கொண்டு வருவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு உதவிட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஒன்றிய வெளியுறவுத்துறை இதில் உடனடியாகத் தலையிட்டு, குவைத் நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், முத்துக்குமரன் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், குவைத் நாட்டிடமிருந்து முத்துக்குமரன் குடும்பத்தினருக்கு உரிய நட்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இது தொடர்பாக இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சரிடமும் தொடர்புகொண்டு வலியுறுத்த இருக்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
14.09.2022
Friday, September 9, 2022
நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். வைகோ வேண்டுகோள்!
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மன உளைச்சலில், கடந்த ஜூன் மாதம் தன்னால் முடியவில்லை என்று குரல் பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சோழபுரம் இந்திரா நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த அமுதா, ஆவடியை அடுத்த பாண்டே°வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் லக்சனா சுவேதா, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்தார். இதற்கிடையில் பிலிப்பைன்° நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவம் தொடர்பான படிப்பை இணையத்தில் ஒன்றரை ஆண்டுகள் படித்து வந்தார்.
எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த லக்சனா சுவேதா, 2-ஆவது முறையாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வுக்கு பிறகு அவர் தனது தாயாரிடம் “நான் தேர்வை சரியாக எழுதவில்லை. மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும் போல் இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.
நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாவது முறையும் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஜெனி என்ற ஜெயசுதா, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நீட் நுழைவுத்தேர்வு திணிக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப்போக்கி கொண்ட நிலையில் ,நேற்று மாணவி லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அனுமதி தராமல் அலட்சியப் படுத்தி வருவதால். தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் தொடரும் துயரமாக உள்ளது.
பா.ஜ.க அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது.
ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள் ,தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.
மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றில் தேர்வு செய்து பயின்று. வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
09.09.2022
Sunday, September 4, 2022
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி விரிபுகழ் விண்ணுயர்ந்து நிற்கும்! வைகோ MP அறிக்கை!
செப்டம்பர்-5 ,ஆசிரியர் தினம். வைகோ MP வாழ்த்து!
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்

































