Thursday, July 30, 2015

அப்துல் கலாம் மறைவின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து நிகழ்வுகளையும், தமிழக முதல்வருக்குரிய கடமைகளையும் தானே செய்தார் தமிழின முதல்வர் வைகோ!

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் மறைவையொட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 28.07.2015 அன்று ரமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நேற்று (29.07.2015) டெல்லியிலிருந்து அவரது உடல் ரமேஸ்வரத்தக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, வைகோ அவர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று (30.07.2015) இறுதிச் சடக்கும் நடக்கும் இடத்தில் தன் மண்ணின் துக்கத்தை முன்னெடுத்து நடத்தும் தமிழ்த்தாயின் தலைமகனான கலாம் அவர்களின் இறுதி நிகழ்வில் ஒரு சகோதரனாக மூன்றுநாள் நிகழ்விலும் தங்கி, வெளியில் இருந்து வந்த தலைவர்களை வரவேற்றார். பின்னர் அப்துல் கலாம் அவர்களின் மூத்த அண்ணன் முத்துமீரான் மரைக்காயர் அருகில் அமர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்தர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டத் தலைவர்களை திரு முத்துமீரான் மரைக்காயர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வைத்து, தன் மண்ணின் துக்கத்தில் தான் ஆற்ற வேண்டிய கடமையை வழக்கம் போல் செய்து முடித்திருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் என அனைவரையும் விட தலைவருக்கு இந்த முக்கியத்துவத்தின் நோக்கம், இவர்கள் அனைவரையும் விட தலைவருக்கு கூடுதல் தகுதி உள்ளது என்பதே காரணம்.
அந்தத் தகுதி தான்…
அரசியலில் நேர்மை!
பொதுவாழ்வில் தூய்மை!
இலட்சியத்தில் உறுதி!

தலைவர் வைகோ வைகோ அவர்கள் அப்துல் கலாம் அவர்கள் பயின்ற பள்ளியில் சென்று அவர் படித்த வகுப்பில் சிறிது நேரம் கலாம் மலர்ந்த நினைவைக் காண உட்கார்ந்து மன நிறைவு பெற்றார். 

அனைத்து தலைவர்களும் திரும்பிய பின்னர் முதல் ஆளாய் வந்த வைகோ கடைசி ஆளாக அனைத்து கடமைகளையும் செவ்வனே முடித்து திரும்பி சென்றார்.

“இவர்தான் இளையர் கனவை நிறைவேற்ற காத்திருக்கும் காவியத் தலைவர் வைகோ”

மதிமுக இணையதள அணி - ஓமன்

Wednesday, July 29, 2015

அப்துல் கலாமுக்கு வைகோ மலரஞ்சலி!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உடலக்கு மறுமலர்ச்சி தி.மு.கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் புதூர் பூமிநாதன், புலவர் செவந்தியப்பன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

தின உழைப்பாளியின் இல்லத்தில் தேநீர் அருந்திய வைகோ!

நேற்று இரவு ராமேஸ்வரம் கலாம் வீட்டிற்கு சென்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, கலாம் குடும்பத்தினரை  சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, ரமேஸ்வரத்திலேயே தங்கியிருந்தார்.

இன்று காலை நடை பயிற்சி சென்றுவிட்டு வரும் வழியில், சந்திரசேகர் என்ற கூலித்தொழிலாளி வைகோ அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, தனது இல்லத்துக்கு வந்து தேநீர் அருந்த வேண்டும் என்றார். அவரது அன்பான கோரிக்கையை ஏற்று அவரது இல்லம் சென்று வைகோ தேநீர் அருந்தினார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்தக்கொண்டார், அப்போது கராத்தே பழனிச்சாமி, மின்னல் முகமது அலி ஆகியோர் தலைவர் வைகோவுடன் உடன் இருந்தனர்

மதிமுக இணையதள அணி



மிஷன் ஆப் லைப் கண்காட்சியைப் பார்வையிட்ட வைகோ!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று இரவு ரமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் இல்லத்துக்குச் சென்ற வைகோ அவர்கள், அவரது அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர், பேரன் சேக் சலீம், அண்ணன் மகன் ஜெயினுல் அப்தீன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கலாம் அவர்களின் மிஷன் ஆப் லைப் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
 
மதிமுக இணையதள அணி - ஓமன்

Tuesday, July 28, 2015

நாட்டுக்கு உழைத்த உத்தமர் அப்துகலாம் வீட்டில் வைகோ அஞ்சலி!

இந்திய அறிவு வானில் நிரப்ப முடியாத வெற்றிடமாக இருக்கின்ற அய்யா அப்துல்கலாம் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள், மதுரை விமான நிலையத்தில் இன்று மாலை 6:30 மணியளவில் வந்தடைந்தார். வைகோ வருவதையறிந்த பத்திரிக்கையாளர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டனர். பின்னர் அவர்களுக்கு பேட்டியளித்தார். பிறகு இராமநாதபுரம் புறப்பட்டார். 

இன்று இரவு ரமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் அவர்களின் இல்லத்துக்குச் சென்ற வைகோ அவர்கள் அவரது அண்ணன் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர், பேரன் சேக் சலீம், அண்ணன் மகன் ஜெயினுல் அப்தீன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கும் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போதும் அப்துல் கலாம் அவர்களின் புகழை எடுத்துரைத்தார் வைகோ.

வைகோவுடன் மாவட்டச் செயலாளர்கள் ராஜா. மு.பூமிநாதன், ப.சரவணன் மற்றும் கரத்தே பழனிச்சாமி, மின்னல் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

நாளை வட சென்னை கழக செயல்வீரகள் கூட்டம் - ஜீவன் அழைப்பு!

நாளை 29-07-2015 புதன்கிழமை மாலை 5 மணி அளவில், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வட சென்னை மாவட்ட கழக அவைத்தலைவர் சிவ.இராஜேந்திரன் தலைமையில் வட சென்னை மாவட்ட மதிமுக கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வடசென்னை மாவட்ட கழக த்டில் உள்ள மாநில அணிகளின் செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி கழகங்களின் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கழக ஆதரவாளர்களையும் உடன் அழைத்து வருமாறு வட சென்னை மாவட்ட செயலாளர் சு.ஜீவன் கேட்டுக்கொள்கிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

செப்டம்பர் 15 திருப்பூர் பல்லடம் மதிமுக மாநாடு நிகழ்ச்சி நிரல்!

அனைத்து கழக தோழர்களும் இப்போதே ஆயத்தமாகி பெருந்திரளாக மாநாட்டிற்கு மகுடம் சேர்க்கவேண்டுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

பொள்ளாச்சி நகர ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

26.7.2015 அன்று மாலை 4மணியளவில் பொள்ளாச்சியில் நகர ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி செயலாளர். வே.ஈஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி எஸ்.கோபால்சாமி வரவேற்புரை வழங்கினார். கோவை மாவட்ட செயலாளர் குகன்மில் ஆ.செந்தில்குமார் அவர்கள் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர்.ஏ.கே.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஜி.பங்காருசாமி, சி.கோவிந்தராஜன், வழக்கறிஞர் மா.பாக்கியம், ஆ.திருமலைசாமி, கா.தர்மராஜ், அ.ஆண்டமுத்து, எஸ்,கல்யாணி, எம்.ஏ.வி.துரைபாய் சிங்கை, சக்தி உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர, செயலாளர்கள், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக, நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர். 

செப்டம்பர்-15 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்தல், மாநாட்டுக்கு பொள்ளாச்சி நகர ஒன்றிய கழகத்தின் சார்பாக 1000 வாகனங்களில் கலந்து கொள்வது எனவும் ஆகஸ்ட் 8,9 ஆகிய இரண்டு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகின்ற கருத்துபட்டறையில் அதிகமான இளைஞர்களை கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இக்கூட்டத்தின் முடிவில் நகரமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி முரளி நன்றி கூறினார்.

மதிமுக இணையதள அணி – ஓமன்