முன்னாள் குடியரசுத்
தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் மறைவையொட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழக
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 28.07.2015 அன்று ரமேஸ்வரத்தில் உள்ள அவரது
இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நேற்று (29.07.2015)
டெல்லியிலிருந்து அவரது உடல் ரமேஸ்வரத்தக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, வைகோ அவர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று (30.07.2015)
இறுதிச் சடக்கும் நடக்கும் இடத்தில் தன் மண்ணின் துக்கத்தை முன்னெடுத்து நடத்தும் தமிழ்த்தாயின்
தலைமகனான கலாம் அவர்களின் இறுதி நிகழ்வில் ஒரு சகோதரனாக மூன்றுநாள் நிகழ்விலும்
தங்கி, வெளியில் இருந்து வந்த தலைவர்களை வரவேற்றார். பின்னர் அப்துல் கலாம்
அவர்களின் மூத்த அண்ணன் முத்துமீரான் மரைக்காயர் அருகில் அமர்ந்து, பிரதமர்
நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர்
உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்தர முதல்வர் சந்திரபாபு நாயுடு,
காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டத் தலைவர்களை திரு
முத்துமீரான் மரைக்காயர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி
வைத்தார். பின்பு டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வைத்து, தன் மண்ணின் துக்கத்தில் தான் ஆற்ற வேண்டிய கடமையை
வழக்கம் போல் செய்து முடித்திருக்கிறார்.
தமிழக
அமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் என அனைவரையும் விட தலைவருக்கு இந்த
முக்கியத்துவத்தின் நோக்கம், இவர்கள் அனைவரையும் விட தலைவருக்கு கூடுதல் தகுதி
உள்ளது என்பதே காரணம்.
அந்தத் தகுதி தான்…
அரசியலில்
நேர்மை!
பொதுவாழ்வில் தூய்மை!
இலட்சியத்தில் உறுதி!
பொதுவாழ்வில் தூய்மை!
இலட்சியத்தில் உறுதி!
தலைவர் வைகோ வைகோ அவர்கள் அப்துல் கலாம் அவர்கள் பயின்ற பள்ளியில் சென்று அவர் படித்த வகுப்பில் சிறிது நேரம் கலாம் மலர்ந்த நினைவைக் காண உட்கார்ந்து மன நிறைவு பெற்றார்.
அனைத்து தலைவர்களும் திரும்பிய பின்னர் முதல்
ஆளாய் வந்த வைகோ கடைசி ஆளாக அனைத்து கடமைகளையும் செவ்வனே முடித்து திரும்பி சென்றார்.
“இவர்தான் இளையர் கனவை நிறைவேற்ற காத்திருக்கும் காவியத் தலைவர் வைகோ”
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment