குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதியும், மது ஒழிப்பிற்காக போராடி வருபவருமான சசி பெருமாள் அவர்கள் இறந்த செய்தியை அறிந்த வைகோ அவர்கள், நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்தார். குழித்துறை மருத்துவமனைக்கு சசிபெருமாள் கொண்டுசெல்லப்பட்டார் என்று அறிந்து மருத்துவமனைக்கு எதிரே திரண்ட பொதுமக்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர். சசிபெருமாளின் சடலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அறிந்து அங்கு சென்றார். சசிபெருமாள் உடலைப் பார்த்தபோது கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார். அவர் கழுத்து, மார்பு, வயிறு முழுவதும் இரத்தத்தால் நிறைந்து உடைகள் நனைந்திருந்தன. மூக்கு வழியாகவும் இரத்தம் வந்துள்ளது. அப்படியானால் சசிபெருமாள் எப்படி உயிர் நீத்தார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். பின்னர் சசிபெருமாள் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைகோ. வைகோவுடன் மதிமுக குமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் சென்றிருந்தார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment